கம்பராமாயணம் 7150 · யுத்த 14.92
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கருப்பை போல் குரங்கு எற்ற - எலியைப் போன்ற (இழிந்த) குரங்கு தாக்கி; கதிர் சுழல் பொருப்பை ஒப்பவன் தான் இன்று பொன்றினான் - சூரியன் சுற்றும் மலையாகிய மேரு மலை போன்ற பிரகத்தன் இன்று மாண்டான்; பகையையும் ஆர் அழல் நெருப்பையும் - பகையினையும் அரிய நெருப்பையும்; அருப்பம் என்று இகழ்ந்தால் - அற்பமென்று இழிவு செய்தால்; அது நீதியோ? - அது நீதி நெறியாகுமோ? (ஆகாது).
பிரகத்தன் என்ற சொல்லுக்குப் பெரிய மலை என்பதே பொருளாதலின், “கதிர்சுழல் பொருப்பையொப்பவன்” என்றார். அற்பம் எதுகை நோக்கி அருப்பம் என வந்தது. தீயையும் பகையையும் சிறிதென இகழ்தல் கூடாது என்பதை “வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால், தீ எச்சம் போலத் தெறும்” (குறள். 674) என வள்ளுவரும் கூறுவர் “அளையுறை பாம்பும் அரசும் நெருப்பும், முழையுறை சீயமும் என்றிவை நான்கும், இளைய எளிய என்றெண்ணி, இகழின் இழுக்கம் தரும்” என்பது ஆசாரக்கோவை (84) “எரியும் தீத்திரள் எள்துணைத்து ஆயினும், கரியச் சுட்டிடும் காந்திக் கனலுமேல், தெரியில் தொல் பகை தான் சிறிதாயினும், விரியப் பெற்ற பின் வென்றிடுகிற்குமே” என்பது சூளாமணி. (சீயவகை. 71) வேற்றுப் பொருள் வைப்பணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Struck by a monkey no better than a rat,
- he who was like the mountain the sun circles has died today;
- if one scorns an enemy, or blazing fire,
- as a trifle, is that wisdom?”
What the poem says
Irāvaṇaṉ draws a lesson from the defeat. A monkey he thought no more of than a rat has killed Pirakattaṉ, a man like Mount Mēru, around which the sun wheels. Treating an enemy or a fire as too small to matter, he says, is never wise.
The maxim is an old one in Tamil: the Tirukkuṟaḷ, the Ācārakkōvai and the Cūḷāmaṇi all warn that a small fire or a small enemy left alone will grow and destroy. Following a particular case with a general truth like this is a recognised figure of speech.