கம்பராமாயணம் 7151 · யுத்த 14.93

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘நிற்க அன்னது நீர்நிறை கண்ணினார்
வற்கம் ஆயின மாப் படை ஓடும் சென்று
ஒற்கம் வந்து உதவாமல் உறுக என
வில் கொள் வெம்படை வீரரை ஏவினான்.

பொருள் · Meaning in Tamil

நீர்நிறை கண்ணினான் - (இவ்வாறு எண்ணிய) நீர்நிறைந்த கண்ணினனாய இராவணன்; அன்னது நிற்க - அது கிடக்கட்டும்; வற்கம் ஆயின மாப்படையோடும் சென்று - அணிஅணியாகப் பெரும் படையோடு சென்று; ஒற்கம் வந்து உதவாமல் - தளர்ச்சியால் பின் அடைதலின்றி; உறுக என - சென்று போர் புரியுங்கள் என்று; வில் கொள் வெம்படை வீரரை ஏவி - வில் ஏந்திய கொடிய சேனை வீரர்களைக் (களத்துக்கு) செல்க என்று ஆணையிட்டு.

இராவணன் அவலம் “நீர் நிறை கண்ணினான்” என்ற தொடர் உணர்த்தும் குறிப்பு. படைகளை அணி அணியாகப் பிரித்தல் இன்றும் வழக்கு. ஆதலின், “வற்கம் ஆயின மாப்படை” என்றார் வருக்கம் - இனம். அணி. எதுகை நோக்கி வற்கம் என வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Let that be,” said he, his eyes brimming with tears,
  2. “go with the great army formed in its divisions,
  3. and engage, with no weakness coming to hinder you”;
  4. and he sent off the fierce warriors who bore bows.

What the poem says

His eyes full of tears, a sign of his grief for Pirakattaṉ, Irāvaṇaṉ puts the loss aside. He orders his archers out, the army arranged in its divisions, and tells them to fight without any faltering.

The verse's sense carries on into the next one, where Irāvaṇaṉ himself mounts his chariot.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘niṟka aṉṉatu nīr niṟai kaṇṇiṉāṉ
vaṟkam āyiṉa māp paṭaiyōṭum ceṉṟu
oṟkam vantu utavāmal uṟuka eṉa
viṟ koḷ vem paṭai vīrarai ēviyē,