கம்பராமாயணம் 7152 · யுத்த 14.94

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கயிலை இடந்தவன் - கயிலை மலையைப் பெயர்த்து எடுத்தவனான இராவணன்; மண்டுகின்ற செருவின் - நிறைந்து (ஒருவரையொருவர்) மிக்குச் செல்கின்ற போரின்; வழக்கு எலாம் கண்டு நின்று - நெறிமுறைகளையெல்லாம் மனத்தால் ஆராய்ந்து; புண் திறந்தன - புண்ணைப் பிளந்தாற்போன்று (மிகச் சிவந்த); கண்ணினன் பொங்கினான் - கண்களையுடையவனாய்ச் சினந்து பொங்கி; திண்திறல் நெடுந்தேர் தெரிந்து ஏறினான் - வலிய உறுதியான நெடுந்தேர் ஒன்றை நன்கு தேர்ந்து (அதில்) ஏறினான்.

ஈசன் கயிலையை எளிதாக எடுத்தவனுக்கு அற்பக் குரங்குகள் தரும் தொல்லை பொறுக்க முடியாத சினத்தையாக்கிற்று என்பார். “கயிலையிடந்தவன் புண்திறந்து அன கண்ணினன்” என்றார் போரில் பகைவர் தாக்குதல், எதிர் தாக்குதல், எயில் காத்தல், எயில் வளைத்தல்; அதிரப் பொருதல் முதலிய போர் முறைகளையெல்லாம் நன்கறிந்தவன் இராவணன். அவற்றையெல்லாம் மனத்துள் நன்கு ஆராய்ந்து தேர் ஏறினான் என்பார். “செருவின் வழக்கு எலாம் கண்டு நின்று நெடுந்தேர் ஏறினான்” என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having weighed every way of the surging battle,
  2. he who uprooted Kayilai, with eyes
  3. like wounds laid open, boiled over in rage,
  4. chose a tall chariot of firm strength, and mounted it.

What the poem says

Irāvaṇaṉ, who once lifted Mount Kayilai, Civaṉ's own mountain, cannot bear to be harassed by mere monkeys. His eyes go red as open wounds. Having thought through every method of war he knows, attack, counter-attack, holding and besieging a fort, he picks a strong chariot and climbs in to lead the fight himself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṇṭukiṉṟa ceruviṉ vaḻakku elām
kaṇṭu niṉṟu kayilai iṭantavaṉ
puṇ tiṟantaṉa kaṇṇiṉaṉ poṅkiṉāṉ
tiṇ tiṟal neṭun tēr terintu ēṟiṉāṉ