கம்பராமாயணம் 7155 · யுத்த 14.97
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மற்றும் - பின்னும்; வானவர் மார்பிடை - தேவர்கள் மார்பில் (பாய்ந்து); இற்றிலாதன - ஒடிந்து விடாதவையும்; எண்ணும் இலாதன - எண்ணுதற்கும் இயலாத அளவினையுடையனவுமாகிய; வான்படை பற்றினான் - உயர்ந்த ஆயுதங்களைக் கைகளில் எடுத்துக் கொண்டான்; படர் மார்பிடைக் கவசம் சுற்றினான் - பரந்த மார்பினிடையே கவசம் அணிந்தான்; நெடும்தும்பையும் சூடினான் - (தான் புரியும் போர்க்கு அடையாள மாலையான) தும்பை மாலையையும் சூடிக்கொண்டான். (இராவணன்)
அதிரப் பொருவது தும்பைத் திணையாதலின், அம்மாலையைச் சூடிப் புறப்பட்டான். மைந்து பொருளாக வந்த வேந்தனை, சென்று தலையழிக்கும் சிறப்பிற்று என்ப. (தொல். பொருள். 71) என்று தொல்காப்பியம் தும்பைத்திணையின் இலக்கணம் கூறுவது அறிக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Then he seized countless fine weapons
- that had never broken against the chests of the gods;
- he wrapped armour about his broad chest,
- and put on the long tumpai garland too.
What the poem says
Irāvaṇaṉ arms himself with countless weapons that have never shattered even against the gods, straps armour round his chest, and puts on a garland of tumpai flowers.
In Tamil tradition warriors wore tumpai when going out to meet a king who had come to test his strength in pitched battle; the old grammar Tolkāppiyam defines this kind of war.