கம்பராமாயணம் 7156 · யுத்த 14.98
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பேரும் கற்றைக் கவரி - (இருமருங்கும்) வீசப்படும் தொகுத்துக் கட்டப்பட்ட வெண்சாமரையால்; பெருங்கடல் நீரும் நீர்நுரையும் - என்ன பெரிய கடலின் நீரும், அதன்மீது உள்ள நுரையும் போல நின்றவனாகிய இராவணன்; முத்தின் கவிகையான் - முத்தால் ஆகிய குடை பிடிக்கப்பட்டதனால்; வெண்ணிறம் ஊரும் - வெள்ளை நிறமுடைய; உவா மதிக் கீழ் உயர்காரும் ஒத்தனன் - பௌர்ணமிச் சந்திரன் கீழே ஒளிர்கின்ற மேகத்தையும் போலே விளங்கினான்.
மன்னர் சின்னங்களாகிய சாமரையும் முத்துக் குடையும் கூறப்பட்டன. சாமரைக்குக் கடல் நுரையும், இராவணனுக்குக் கடல் நீரும் உவமைகள் ஆயின. முத்துக் குடையின் கீழ் விளங்கிய இராவணனுக்கு முழுமதியும் அதன் கீழ் உள்ள மேகமும் உவமைகள் ஆயின. வெண்மை நிறமும், புரளும் செயலும் பற்றி, சாமரைக்குக் கடல் நுரை உவமை. வட்ட வடிவமும் வெண்மை நிறமும் காரணமாக முழுமதி முத்துக்குடைக்கு உவமையாயிற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Standing amid the waving bunched yak-tail fans, he was like
- the water of the great sea with the foam upon it;
- and he of the pearl umbrella was like a tall dark cloud
- beneath the full moon moving in its whiteness.
What the poem says
Irāvaṇaṉ appears with the emblems of kingship, the white yak-tail fans and the pearl umbrella. With the fans tossing white on either side of his dark body he looks like the dark sea crested with foam.
Under the round white umbrella he looks like a dark cloud beneath the full moon.