கம்பராமாயணம் 7157 · யுத்த 14.99

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1போர்த்த சங்கப் படகம் புடைத்திட
சீர்த்த சங்கக் கடல் உக தேவர்கள்
வேர்த்து அசங்க விசும்பு வெடித்திட
ஆர்த்த சங்கம் அறைந்த முரசமே.

பொருள் · Meaning in Tamil

போர்த்த சங்கம் படகம் புடைத்திட - தோல் போர்த்தப் பெற்ற கூட்டமான படகம் எனும் தோற்கருவி அடிக்கப்படவும்; சீர்த்த சங்கக்கடல் உக - சிறப்புக்குரிய சங்குகளையுடைய கடல் சிதறவும்; தேவர்கள் வேர்த்து அசங்கவும் - விண்ணுலகத் தேவர்கள் (அச்சத்தால்) உடல் வியர்த்து வாடவும்; அண்டம் வெடிபட - அண்டங்கள் வெடிபடவும்; சங்கம் ஆர்த்த - சங்கங்கள் பேரொலி எழுப்பின; முரசம் அறைந்த - முரசங்கள் முழங்கப்பட்டன.

மண்ணில் நிகழ்ந்த செயலால், வானுலகில் பாதிப்புகள் நிகழ்ந்தன எனக் கூறியது இது. படகம் தோல் போர்த்தப் பெற்ற ஒருவகைப் போர்ப்பறை. திரிபணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the massed hide-covered paṭakam drums were beaten,
  2. as the noble conch-filled sea was dashed about, as the gods
  3. sweated and shook, and as the cosmic egg split open,
  4. the conches blared and the war drums thundered.

What the poem says

Irāvaṇaṉ's army moves off to a din of hide-covered paṭakam war drums and conches. The noise churns the sea, makes the gods sweat with fear and seems to crack the shell of the universe: things done on earth shake the heavens.

The Tamil chimes on the word caṅkam, meaning both a crowd and a conch, as each line begins.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pōrtta caṅkap paṭakam puṭaittiṭa
cīrtta caṅkak kaṭal uka tēvarkaḷ
vērttu acaṅkiṭa, aṇṭam veṭittiṭa
ārtta caṅkam aṟainta muracamē.