கம்பராமாயணம் 7158 · யுத்த 14.100

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தேரும் மாவும் படைஞரும் தெற்றிட
மூரி வல் நெடுந் தானையின் முற்றினான்;
நீர் ஒர் ஏழும் முடிவில் நெருக்கும் நாள்.
மேரு மால்வரை என்ன விளங்கினான்.

பொருள் · Meaning in Tamil

தேரும் மாவும் படைஞரும் தெற்றிட - தேர்களும் குதிரைகளும் படை வீரர்களும் நெருங்க; மூரி வல்நெடுந் தானையில் முற்றினான் - வலிமை மிக வாய்ந்த பெரிய சேனைகளால் சூழப்பட்ட இராவணன்; ஓர் எழுநீர்முடிவில் நெருக்கும் நாள் - ஒப்பற்ற ஏழு கடல்களும் யுகமுடிவில் சூழ்ந்து நெருக்கப் பெற்றபோது; மேருமால் வரை என்ன விளங்கினான் - மிகப் பெரிய மேருமலை போல் காணப்பட்டான்.

தெற்றல் - நெருக்கல். “கற்றவர் தெற்றிவர” (பெரியாழ். 1:5:8) ஊழிக்காலத்தில் மேருகிரியைக் கடல் அலைகள் சூழ்ந்து நெருக்கி மூழ்விக்கும் என்பது புராண மரபு. ஏழுகடல்களால் நெருக்கப்பெறும் மேருகிரிக்கு, இராவணன் நிறத்தாலும் பெருமையாலும் ஒப்பு ஆயினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With chariots, horses and soldiers pressing close,
  2. surrounded by his mighty, vast army,
  3. he shone like great Mount Mēru on the day
  4. the seven seas close in upon it at the end of time.

What the poem says

Hemmed in by his chariots, horses and foot soldiers, Irāvaṇaṉ towers over them like Mount Mēru at the end of an age, when the seven oceans rise and crowd around it to drown it, as the purāṇas tell. He matches the mountain in size and in dark colour.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tērum māvum paṭaiñarum teṟṟiṭa
mūri val neṭun tāṉaiyil muṟṟiṉāṉ;
nīr or ēḻum muṭivil nerukkum nāḷ.
mēru māl varai eṉṉa viḷaṅkiṉāṉ.