கம்பராமாயணம் 7159 · யுத்த 14.101

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஏழ் இசைக் கருவி வீற்றிருந்தது என்னினும்
சூழ் இருந் திசைகளைத் துடக்கும் தொல்கொடி
வாழிய உலகு எலாம் வளைந்து வாய் இடும்
ஊழியின் அந்தகன் நாவின் ஓங்கவே.

பொருள் · Meaning in Tamil

ஏழிசைக்கருவி - ஏழ் இசையினையும் தருகின்ற வீணையாகிய இசைக்கருவி; வீற்றிருந்தது என்னினும் - (உருவம்) பெருமையுறப் பொறிக்கப்பட்டிருந்தது ஆனாலும்; சூழ்இருந்திசைகளை - சுற்றியுள்ள பெருந்திசைகளை; தொடரும் தொல்கொடி - காற்றினால் அளாவிப் பறக்கின்ற பழமையான (இராவணனது) கொடியானது; வாழிய உலகு எலாம் - வாழ்கின்ற உலகையெல்லாம்; வளைத்து வாயிடும் - வளைத்துத் தன் வாயில் இட்டு விழுங்கும்; ஊழியின் - ஊழிக்காலத்து; அந்தகன் நாவின் ஓங்க - இயமனின் நாக்கினைப் போல உயரத்தே தோன்றவும்.

இது முதல் ஆறு பாடல்கள் ஒரு தொடர். இராவணன் வீணைக் கொடியுடைய வேந்தன். வீணைக்கொடி திசைகளை அளாவிப் பறப்பது, ஊழிக்காலத்து கிடைத்ததை யெல்லாம் சுழற்றி விழுங்கும் கூற்றுவனின் சுழலும் நாவுக்கு உவமையாயிற்று. தன்மைத் தற்குறிப்பேற்ற அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Though the instrument of the seven notes sat upon it in state,
  2. his ancient banner, which reached out to the vast surrounding quarters,
  3. rose high like the tongue of Death at the end of an age,
  4. which curls round all the living worlds and puts them in its mouth.

What the poem says

This begins a run of six verses describing Irāvaṇaṉ's march, all leading to a single main verb. His banner bears a vīṇā, the lute of the seven notes, a gentle emblem; yet as it streams out across the sky it looks like the tongue of Death at the end of time, curling round the whole world to swallow it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēḻ icaik karuvi vīṟṟiruntatu eṉṉiṉum
cūḻ irun ticaikaḷait toṭarum tol koṭi
vāḻiya ulaku elām vaḷaittu vāy iṭum
ūḻiyiṉ antakaṉ nāviṉ ōṅkavē.