கம்பராமாயணம் 7160 · யுத்த 14.102

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வேணு உயர் நெடுவரை அரக்கர் வேலைக்கு ஓர்
தோணி பெற்றனர் அது கடக்கும் தொல்செருக்
காணிய வந்தவர் கலக்கம் கைம் மிகச்
சேண் உயர் விசும்பிடை அமரர் சிந்தவே.

பொருள் · Meaning in Tamil

வேணுஉயர் நெடுவரை - மூங்கில்கள் உயர்ந்த பெரிய மலை போன்ற; அரக்கர் - அரக்கர்களாகிய; வேலைக்கு ஓர் தோணி பெற்றனர் - கடலைத் தாண்டுவதற்குக் (கிட்டிய) (இராமனாகிய) ஓர் ஓடம் பெற்றவராய்; என கடக்கும் - என்று அத்தோணி கடந்து செல்லப்போகும்; தொல்செரு - தொன்மை வாய்ந்த இலங்கைக் களத்தை, காணிய வந்தவர் அமரர் - காண வந்தவர்களாகிய தேவர்கள்; கலக்கம் கைம்மிக - (இராவணனைக் கண்டு) கலக்கம் மேலோங்க; சேண் உயர் விசும்பிடை சிந்த - மிக உயர்ந்த ஆகாயத்தில் சிதறிப் போகவும்;

வானோர் துன்பக் கடலிடைத் தோணியாய் வந்தவன் பெருமான். “அரக்கர் என் கடலிடை ஆழ்கின்றார் ஒரு மரக்கலம் பெற்றென மறுக்கம் நீங்கினார்” (2636) என முன்பு குறித்தார் கைம்மிகல் - மேல் ஓங்குதல். “கைமீறிப் போயிற்று” எனும் வழக்கும் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the immortals, who had come to watch the ancient battle
  2. they hoped to cross as one crosses the sea, having found a boat
  3. against the demons, tall as great mountains where bamboo grows high,
  4. scattered in the lofty sky, their alarm overflowing;

What the poem says

The gods have gathered in the sky to watch the war. For them the demons, huge as bamboo-covered mountains, are a sea of trouble, and Irāmaṉ is the boat that will carry them across it. But when Irāvaṇaṉ himself appears, their fear gets the better of them and they scatter.

The image of Irāmaṉ as a boat on a sea of suffering appears earlier in the epic.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vēṇu uyar neṭu varai arakkar vēlaikku ōr
tōṇi peṟṟaṉar eṉak kaṭakkum tol ceruk
kāṇiya vantavar kalakkam kaimmika,
cēṇ uyar vicumpiṭai amarar cintavē.