கம்பராமாயணம் 7161 · யுத்த 14.103

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கண் உறு கரும்புகை கதுவ கார் நிறத்து
அண்ணல் வாள் அரக்கர்தம் அரத்தப் பங்கிகள்
வெண்நிறம் கோடலின் உருவின் வேற்றுமை
நண்ணினர் நோக்கவும் அயிர்ப்பு நல்கவே.

பொருள் · Meaning in Tamil

கண் உறு கடும் புகை கதுவ - (இராவணனுடைய) கண்களில் எழுந்த சினத்தீயால் தோன்றிய கொடிய புகை சூழ்வதனால்; கார் நிறத்து அண்ணல் வாள் அரக்கர் தம் அரத்தப் பங்கிகள் - கரிய நிறமும் தலைமையும் கொண்ட கொடிய அரக்கருடைய செம்பட்ட உரோமங்கள்; வெண்ணிறம் கோடலின் - வெண்மை நிறம் கொண்டு விட்டதனால்; உருவில் வேற்றுமை - உருவத்தில் வேற்றுமையை; நண்ணினர் நோக்கவும் - அவர்களுடைய உறவினர் கண்ட போதும்; அயிர்ப்பு நல்கவும் - ஐயத்தைத் தரவும்;

அண்ணல் தேவரையும் சிறை வைத்த அரக்கர் தம் தலைமை குறித்து இராவணன் கண்ணில் எழுந்த செந்தீயால் தோன்றிய வெண்புகை, அரக்கர்தம் செம்பட்டை முடியினை வெண்மை யாக்கி விட்டமையால் அரக்கவீரர்களை போர்களத்துக்கு வழி அனுப்பி விடைபெற வந்த அவர்தம் உறவினர்கள் தம் உறவு வீரர் யார் எனத் தெரியாது திகைத்தனர் என்பதாம். கண்ணில் தீயும் புகையும் - உயர்வு நவிற்சி. அரத்தம் - சிவப்பு. பங்கி - மயிர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the harsh smoke rising from his eyes enveloped them,
  2. and the red hair of the dark-hued, lordly, cruel demons
  3. turned white, so that the change in their looks
  4. left even their kin who looked at them in doubt;

What the poem says

Irāvaṇaṉ's eyes burn so fiercely with rage that smoke pours from them. It settles on the red hair of the dark demon warriors and turns it white, so that the relatives who came to see them off cannot recognise their own men.

The fire and smoke in his eyes are a deliberate exaggeration.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṇ uṟu kaṭum pukai katuva kār niṟattu
aṇṇal vāḷ arakkartam arattap paṅkikaḷ
veṇ niṟam kōṭaliṉ uruviṉ vēṟṟumai
naṇṇiṉar nōkkavum ayirppu nalkavē.