கம்பராமாயணம் 7162 · யுத்த 14.104
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கால் நெடுந் தேர் உயர் கதலியும் - சக்கரங்கள் பொருந்திய உயர்ந்த தேர்களில் கட்டியுள்ள கொடிகளும்; ஏனையர் கரத்து ஏந்திய பதாகை ஈட்டமும் - மற்றைய வீரர்கள் கைகளில் ஏந்திய கொடிகளின் கூட்டமும்; ஆனையின் கொடிகளும் - ஆனைகள் ஏந்திச் சென்ற கொடிகளும்; அளவித் தோய்தலால் - ஒன்று கூடித் தோய்வதனால், வான ஆறொடு - வான கங்கையோடு; மழை ஒற்றி வற்ற - மேகமும் (நீர் உறிஞ்சப்பட்டு) நீர் வற்றிப் போகவும்;
வான ஆறு - ஆகாய கங்கை. இக்கொடிகளின் கூட்டம் மேக நீரையெல்லாம் உறிஞ்சியும் விடாய் தீராதது போல, வான கங்கையளவும் வளர்ந்து அதனையும் வற்றச் செய்து விட்டது என உயர்வு நவிற்சியால் குறித்தார்
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the tall flags on the long-wheeled chariots,
- the massed banners held in the hands of the others,
- and the pennants on the elephants, mingling and dipping into them,
- blotted up the river of the sky and the clouds until they ran dry;
What the poem says
The banners of the demon army, on chariots, on elephants and in soldiers' hands, rise so high that they dip into the clouds and soak them dry. Still thirsty, they reach the heavenly Ganges, the river of the sky, and drain that as well.
The image is a deliberate exaggeration of the army's size and the height of its standards.