கம்பராமாயணம் 7163 · யுத்த 14.105

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆயிரம் கோடிபேய் - ஆயிரம் கோடிப் பேய்க்கணங்கள்; அங்கை தூயன ஆயுதம் சுமந்து பின்தொடர - தம் கையகத்தே ஆயுதங்களைச் சுமந்து கொண்டு பின்தொடரவும்; சுற்று ஒளிர் சேஇருமணி - சுற்றிலும் ஒளிவீசுகின்ற சிவந்த பெரிய மணிகள் கட்டிய; தெரிந்து ஏயின - தெரிந்தெடுத்து உடன்வருமாறு ஆணையிடப்பட்டவையுமான; நெடுஞ்சேமத்தேர் ஆயிரத்து இரட்டி எய்த - பெரிய சேமத்தேர்கள் இரண்டாயிரம் பின்தொடரவும்.

இராவணன் கொடுமைக்கேற்ப அவன் மெய்க்காவல் படையாகப் பேய்களைக் கூறினார். போரிடும் தேர் அழியின் அதனிடத்தில் போய் நிற்க இருப்பில் இருக்கும் தேர் “சேமத்தேர்”: போரில் ஆயுதங்கள் அழியின் உடனே அவற்றைப் பெறுவதற்காக ஆயத்த நிலையில் வைத்திருக்கும் படைக்கருவிகள் சேமக்கலங்கள். அவற்றை இரண்டாயிரந் தேர்களில் பேய்கள் எடுத்துச் சென்றன எனினுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As a thousand crores of ghouls followed behind,
  2. carrying gleaming weapons in their hands, and as reserve chariots,
  3. tall, hung with large red gems that shone all round,
  4. chosen and ordered to come, two thousand of them, followed on;

What the poem says

Irāvaṇaṉ's train is described. Behind him march a thousand crores of ghouls carrying weapons, a bodyguard that suits his cruelty. Two thousand reserve chariots, studded with red gems, follow, ready to replace his own if it is wrecked; they may also carry spare weapons.

This is still part of the six-verse sequence describing his advance.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyiram kōṭi pēy aṅkai āyutam
tūyaṉa cumantu piṉ toṭara cuṟṟu oḷir
cēyiru maṇi neṭuñ cēmat tēr terintu
ēyiṉa āyirattu iraṭṭi eytavē;