கம்பராமாயணம் 7164 · யுத்த 14.106

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஊன்றிய பெரும்படை - போர்புரிய எதிரே நின்ற பெரிய வானரப் படை; உலைய - நிலைகுலைய; உடன்உற்று ஆன்ற போர் அரக்கர்கள் - தன்னுடன் வந்த (ஆற்றல்) நிறைந்த போர் புரியவுள்ள அரக்கர்கள்; ஆர்த்து எழ - (மகிழ்ச்சியால்) ஆர்ப்பரித்து ஓங்க; உலகு எனத் தொடர்ந்து நின்றன - உலகம் என்ற பெயருடன் (ஒன்றின் மேல் ஒன்றாக) தொடர்ந்து உள்ளனவாகிய; மூன்றையும் கடந்து - மூன்றுலகையும் (தடுப்பார் இல்லாமையால்) கடந்து சென்று; ஒரு வெற்றி முற்றினான் - உலகங்களையெல்லாம் வென்று ஒப்பற்ற வெற்றியைத் திரட்டியவனான இராவணேசுவரன்; தோன்றினன் - போர்க்களத்தில் காட்சியளித்தான்.

ஊன்றிய படை - இலங்கை மதிலைச் சுற்றி நின்ற வானரப் படையைக் குறித்தது. “எதிர் ஊன்றல் காஞ்சி” (பு.வெ.மாலை) கொடி ஓங்க, அமரர் சிந்த, புகை நோக்கவும் அயிர்ப்பு நல்க, வான ஆறொடு மழை ஒற்றி வற்ற, ஆயிரங்கோடி பேர் தொடர, சேமத்தேர் ஆயிரத்திரட்டி எய்த, ஊன்றிய பெரும்படை உலைய, அரக்கர் நெருங்கி ஆர்த்தெழ, வெற்றி முற்றியவனான இராவணன் தோன்றினன். என முன்பு வந்த ஐந்து செய்யுள்களில் வந்த வினை எச்சங்களையும், இச்செய்யுளில் வந்த வினையெச்சங்களையும் கூட்டி தோன்றினான் என வினை முடிவு செய்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the great army planted before him reeled, and the demons
  2. seasoned in war, who came with him, crowded close and rose up roaring,
  3. there appeared he who had passed beyond all three
  4. that stand one above another, called the worlds, and won a matchless victory.

What the poem says

The six-verse sequence ends with its main verb: Irāvaṇaṉ appears on the field. He has conquered all three worlds and has a victory no one else can match. The monkey army drawn up around the walls of Ilaṅkai wavers at the sight, and his own warriors close in round him, roaring.

All the actions of the five verses before, the soaring banner, the scattering gods, the whitened hair, the drained sky-river, the ghouls and the reserve chariots, lead up to this single sentence.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ūṉṟiya perum paṭai ulaiya uṟṟu uṭaṉ
āṉṟa pōr arakkarkaḷ neruṅki ārttu eḻa
tōṉṟiṉaṉ ulaku eṉat toṭarntu niṉṟaṉa
mūṉṟaiyum kaṭantu oru veṟṟi muṟṟiṉāṉ.