கம்பராமாயணம் 7167 · யுத்த 14.109

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தொடை உறு வற்கலை ஆடை சுற்றி மேல்
புடை உறு வயிர வாள் பொலிய வீக்கினான்
இடை உறு கருமத்தின் எல்லை கண்டவர்
கடை உறு நோக்கினின் காணும் காட்சியான்.

பொருள் · Meaning in Tamil

இடையுறு கருமத்தின் - (பக்தியோகம், கருமயோகம், ஞானயோகம் என்பவற்றுள்) இடைப்பட்டதாகிய கருமயோகத்தினுடைய; எல்லை கண்டவர் - முற்றிய நிலையடைந்தவர்கள்; கடையுறு நோக்கினில் - கடைசி யோகமாகிய ஞான யோகத்தில்; காணும் காட்சியான் - காணுகின்ற காட்சிப் பொருளாகிய இராமபிரான்; தொடையுறு வற்கலை ஆடை சுற்றி - தொடுத்துக் கட்டப்பெற்ற மரவுரியை இடையிலே சுற்றி (உடுத்து); மேல் புடை உறுவயிரவாள் - அதன் மேல் பக்கத்திலே வயிர வாளினை; பொலிய வீக்கினான் - பொலியுமாறு (இடையில்) கட்டினான்.

பக்தி யோகமுடையவராய் கருமயோக நெறியின் எல்லையைக் கண்ட ஞானிகள் காணும் ஞானக்காட்சியாம் பரம்பொருளே இராமன் வடிவில் வந்துள்ளது என்றார். ஞானக்கண்ணாலேயே காண்பதற்குரிய பரம்பொருள், ஓர் எளிய போர் வீரனைப் போல், உடை, வாள், பூண்ட எளிமைக்கு (சௌலப்பியம்) இரங்கியவாறுமாம். வற்கலை - மரவுரி. வற்கலா எனும் வடசொல். “ஆ ஈறு ஐயாம்” எனும் (நன்னூல்) இலக்கணப்படி வற்கலையென வந்தது. “ஒப்பு அடக்கும் ஐம்பொறியோடு கரணத்து அப்புறம் கடக்கும் வால் உணர்வினுக்கு அணுகும் காட்சியான்” (கம்ப. 1865) பரமான்மா, சீவான்மா இருவரையும் ஒருங்கே காணும் ஞானக் காட்சி யோகியருக்கும் கிட்டும் என்பதனை “இருவரை ஒருங்கு காணும் யோகியர் என்னல் ஆனான்” (கம்ப. 6772) என்பதனாலும் உணர்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Wrapping round him a garment of bark cloth bound together,
  2. he fastened over it at his side a shining diamond sword,
  3. he who is the vision seen with the final sight
  4. by those who have reached the limit of the middle path of action.

What the poem says

Irāmaṉ arms for battle. He ties on his bark-cloth garment, the dress of a forest ascetic, and belts a gleaming sword over it.

The poet reminds us who this plainly dressed warrior really is: the Supreme Being, whom sages reach only at the end of the path of action, in the final vision of knowledge. That he should dress and arm like an ordinary soldier shows his willingness to come within reach of all.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1toṭaiyuṟu vaṟkalai āṭai cuṟṟi mēl
puṭai uṟu vayira vāḷ poliya vīkkiṉāṉ
iṭai uṟu karumattiṉ ellai kaṇṭavar
kaṭai uṟu nōkkiṉ kāṇum kāṭciyāṉ.