கம்பராமாயணம் 7168 · யுத்த 14.110

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஒத்து உறு சிறு குறள் பாதம் உற்ற நாள்
வித்தக அருமறை உவகை மிக்கு மேல்
பத்து உள விரல் புடை பரந்த பண்பு எனச்
சித்திரச் சேவடிக் கழலும் சேர்த்தினான்.

பொருள் · Meaning in Tamil

ஒத்துஇரு சிறு குறள் பாதம் உற்ற நாள் - இரண்டும் ஒன்றுக்கொன்று ஒத்தனவாய் உள்ள சிறிய குறள் உருக்கொண்ட வாமனனின் பாதம்; உற்றநாள் - (மண்உலகையளந்த பின்) வானுலகையளக்க வானிற்கு நிமிர்ந்த காலத்தே; வித்தக அருமறை - ஞானம் நிறைந்த வேத புருடனாய பிரமன்; உலகை மிக்கு - வாழ் உலகுக்கு மேல் மிக்குச் சென்று; மேல் - திருவடியின் மேல்; பத்துடை விரல் புடை பரந்த பண்பு என - பிரமனது பத்தாகவுள்ள விரல்கள் அத்திருவடிகள் மேல் பரந்த தன்மை போல, சேவடி சித்திரக் கழலும் சேர்த்தினான் - சிவந்த தன்திருவடிமேல் ஓவிய வேலைப்பாடமைந்த வீரக்கழலையும் கட்டினான் (இராமபிரான்).

வேதபுருடன் பிரமன். திருமால் வாமன அவதாரங் கொண்டு அமைந்தபோது அத்திருவடியைப் பிரமன் வானகங்கை நீரால் கழுவிப் பூசித்த போது பத்து விரல்களையும் பதிய வைத்ததுபோல், இராமபிரான் தன் திருவடிகளின் மேல் வீரக் கழல்களைப் பதித்தான் என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As on the day the small dwarf's two matching feet were thrust forth,
  2. and the wise one of the precious Vedas, rising above the world,
  3. spread his ten fingers over them,
  4. so he set the finely wrought warrior's anklets on his red feet.

What the poem says

Irāmaṉ fastens ornate warrior's anklets on his feet. The poet compares this to an episode from Viṣṇu's dwarf incarnation: when the dwarf grew to giant size and lifted his foot to span the heavens, Piramaṉ, lord of the Vedas, washed that foot with the waters of the heavenly Ganges and laid his ten fingers upon it in worship.

The anklets settle on Irāmaṉ's feet the way those fingers did.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ottu iru ciṟu kuṟaṭ pātam uytta nāḷ
vittaka aru maṟai ulakai mikku mēl
pattu uḷa viral puṭai paranta paṇpu eṉa,
cittirac cēvaṭik kaḻalum cērttiṉāṉ.