கம்பராமாயணம் 7169 · யுத்த 14.111
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மீன் எலாம் - விண்மீன்கள் யாவும், பூத்த வான் நிகர் - மலர்ந்துள்ள வானத்தைப் போன்ற; பூ உயர் - பூ வேலைப்பாடுகள் சிறந்து; மேவுஅருங்கவசம் இட்டு இறுக்கி வீக்கினன் - பொருந்திய அரிய கவசத்தைத் தரித்து இறுக்கிக் கட்டினான் இராமபிரான்; திருமறு மார்பில் - “ஸ்ரீவத்சம்” என்னும் மறு அமைந்த மார்பிலிருந்து; தேவியைத் தீர்ந்தனன் - தேவியான திருமகளைத் (தற்போது) பிரிந்துள்ளான் ஆதலின்; நோவிலள் என்பது நோக்கினான் கொல் - (மார்பை இறுக்குவதனால் அவள்) நோகாள் என்பதனை நினைத்தனன் போலும்.
பூவேலைத் திறன்கள் பொதிந்த மார்புக் கவசத்திற்கு, பூவெலாம் பூத்த வானத்தை உவமித்தார். திருமகள் மார்பில் உள்ளபோது, மார்புக் கவசம் இறுக்கப்பட்டால் அவள் பூமேனி நோகும். திருமகள் சீதையாகி பெருமானைப் பிரிந்து, அசோக வனத்தில் இப்போது இருப்பதால், அவட்கு நோகாது என்று, பெருமான் கவசத்தை இறுக்கிக் கட்டினான் போலும் என்று கூறியது தற்குறிப்பேற்றமாகும். திருமாலின் மார்பில் திருமகள் தங்குமிடம் “ஸ்ரீவத்சம்” எனும் மறு (மச்சம்) வாகக் குறிக்கப் பெறும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He put on and bound tight a fitting, precious armour, flower-wrought,
- like the sky where all the stars have blossomed;
- he had been parted from the goddess on his chest with its sacred mark;
- did he consider that she would feel no pain?
What the poem says
Irāmaṉ straps on a breastplate worked with flower patterns, like a night sky in full bloom with stars, and pulls it tight.
The poet offers a fanciful reason. As Viṣṇu, Irāmaṉ carries the goddess Tirumakaḷ on his chest, at the sacred mark called Śrīvatsa. Ordinarily a tight breastplate would hurt her, but now she is Cītai, held far away in Irāvaṇaṉ's grove, so perhaps he thought there was no one there to be hurt.