கம்பராமாயணம் 7171 · யுத்த 14.113

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1புதை இருள் பொழுதினும் மலரும் பொங்கு ஒளி
சிதைவு அருநாள் அலர்ச் சிவந்த தாமரை
இதழ் தொறும் வண்டு வீற்று இருந்தது ஆம் எனத்
ததைவுறு நிரை விரல் புட்டில் தாங்கினான்.

பொருள் · Meaning in Tamil

புதை இருட் பொழுதினும் - உலகப் பொருள்களைத் தன்னுள் மறையச் செய்கின்ற இருட்காலத்திலும்; மலரும் - மலரும் இயல்புள்ளதும்; பொங்கு ஒளி - ஒளி பொங்குகின்ற கதிரவன்; சிதைவு அரு நாள் வர - (அவ்விருளைக்) கெடுக்கின்ற பகற்பொழுது வரும்போதும்; சிவந்த தாமரை - சிவந்த நிறமுடைய தாமரையின்; இதழ்தொறும் - இதழ்கள் தோறும்; வண்டு வீற்றிருந்ததாம் என - வண்டுகள் அமர்ந்திருந்தன என்று கூறுமாறு; ததைஉறு நிலை விரல் - நெருங்கிய வரிசையான விரல்களில்; புட்டில் தாங்கினான் - கவசங்களை அணிந்தான் (இராமன்).

இரவிலும் பகலிலும் மலர்ந்திருக்கும் தாமரை என்றது இல்பொருள் உவமை. இரவும் பகலும் கூம்பாது. உலகுக்கு ஓவாது உதவும் கரங்கள் எம்பெருமான் திருக்கரங்கள் என்பது குறிப்பு. புட்டில் - விரற்செறி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if, on a red lotus that blooms even in the time of hiding darkness
  2. and when the day of bright light that nothing mars comes,
  3. a bee had settled on every petal,
  4. he put the finger-guards on his close-ranked fingers.

What the poem says

Irāmaṉ slips dark finger-guards over his fingers. His red hand is a lotus and the guards are bees sitting on each petal.

It is a lotus that never exists in nature, one that stays open by night as well as by day: like the Lord's hands, it never closes and never stops helping the world.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1putai iruṭ poḻutiṉum malarum poṅku oḷi
citaivu aru nāḷ varac civanta tāmarai
itaḻtoṟum vaṇṭu vīṟṟiruntatām eṉa,
tataivuṟu nirai viraṟ puṭṭil tāṅkiṉāṉ.