கம்பராமாயணம் 7172 · யுத்த 14.114
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உலகுறு பல்லியல் பாடை - உலகில் வழங்கும் பல தன்மைகளையுடைய மொழிகளில்; பாடு அமைந்து - சிறந்த அறிவு பெற்று; எல்லை இல் நூற்கடல் ஏற நோக்கிய - கணக்கற்ற நூல்களாகிய கடலைக்கரை கண்டு ஏறக் கருதியுள்ள; நவை அறு - குற்றம் நீங்கிய; நல் இயல் கவிஞர் நாவரும் - நல்ல பண்புகள் நிறைந்த கவிஞர்கள் நாவிலிருந்து (சரம் சரமாகப்) புறப்படுகின்ற சொல் என - சொற்களைப் போன்று; தொலைவிலாத் தூணி தூக்கினான் - (அம்புகள்) குறையாது புறப்பட்டுக் கொண்டேயிருக்க வல்ல அம்பறாத்தூணியைத் தொங்கவிட்டுக் கொண்டான்.
உலக மொழிகள் ஒவ்வொன்றும் தனித்தனி இயல்புடைமையால், “உலகுறு பல்லியல் பாடை” என்றார் ஒவ்வொரு மொழிக்கும் சிறப்பும் பெருமையும் அம்மொழியில் உள்ள கணக்கற்ற நூல்களைச் சார்ந்தவையாதலின், “பாடு அமைந்து எல்லையில் நூல்கடல்” என்றார். “புலவர் சொல் துறை புரிந்தன போன்றன சரங்கள்” (கம்ப. 7494) எனவும், “நல்லியல் கவிஞர் நாவில் பொருள் குறித்து அமர்ந்த நாமச் சொல் எனச் செய்யுள் கொண்ட தொடையென” (கம்ப. 7293) எனவும், “பல் அலங்காரப் பண்பே காகுத்தன் பகழி” (கம்ப. 7293) எனவும் பலமுறை கவிஞர் சொல்லையும் இராமபிரான் அம்புகளையும் ஒப்பாகக் கூறியுள்ளமை காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like the words that come to the tongues of fine, flawless poets
- who have mastered the many-natured languages of the world
- and set out to climb ashore from the boundless sea of books,
- he hung on the quiver that never runs empty.
What the poem says
Irāmaṉ slings on a quiver that never runs out of arrows. It is like the speech of a great poet who has mastered many languages and crossed the endless ocean of their literature: words keep flowing from such a poet without pause.
Kampaṉ often compares Irāmaṉ's arrows to a good poet's words.