கம்பராமாயணம் 7173 · யுத்த 14.115

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கிளர் மழைக் குழுவிடை - கிளர்ந்தெழுகின்ற மேகக் கூட்டத்தினிடையே; கிளர்ந்தமின் என - விளங்கிய மின்னல் என்று தோன்றுமாறு; அளவு அறு செஞ்சுடர் பட்டம் ஆர்த்தனன் - (நெற்றியில்) அளவில்லாத செவ்வொளியுடைய வீரப்பட்டம் கட்டிக்கொண்டான்; இளவரிக் கவட்டு இலை ஆரொடு - முற்றாக வரிகள் அமைந்து இரு பிளவாக இலையுள்ள ஆத்திமாலையோடு; ஏர்பெற - அழகுபெற; துளவொடு தும்பையும் - துளப மாலையொடு தும்பை மாலையையும்; சுழியச் சூடினான் - வட்டமாக அணிந்தான் (இராமன்).

கரிய மேகத்தில் தோன்றும் மின்னல், பெருமானின் கரிய திருமேனியில் கட்டிய நெற்றிப்பட்டத்திற்கு உவமையாயிற்று. இராமபிரான் தன் குலத்துக்குரிய ஆத்தி மாலையும், வழிபடு கடவுட்கு உரிய துளவ மாலையும், போர்த்திணைக்குரிய தும்பை மாலையும் சூடினான். சுழிய வட்டமாக அணிவது கண்ணி எனப்படும். “சூரிய வங்கிசத்துக்கு ஆத்திமாலையும், பரத்துவத்துக்குத் துழாய் மாலையும் அதிரப்பொருவதற்குத் தும்பை மாலையும் சூடினான் என்க” என்பது பழைய உரை. மூலம் வடமொழி எனினும் பாடுவது தமிழ்க் காப்பிய மாதலின் தமிழின் புறப்பொருள் மரபினைக் கம்பர் பேணியது வரைக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like lightning flashing out amid a mass of surging clouds,
  2. he bound on a war-band of boundless red radiance;
  3. and with the young-veined, cleft-leaved ār garland, for beauty,
  4. he wore the tuḷasi and the tumpai too, wound in a ring.

What the poem says

Irāmaṉ ties a glowing red war-band on his forehead; against his dark body it looks like lightning in a storm cloud.

He puts on three garlands: āttiflowers, the emblem of his Solar dynasty; tuḷasi, sacred to Viṣṇu, whom he embodies; and tumpai, worn for pitched battle. Kampaṉ's story comes from Sanskrit, but here he follows the Tamil conventions of war poetry.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kiḷar maḻaik kuḻuviṭaik kiḷarnta miṉ eṉa
aḷavu aru ceñ cuṭarp paṭṭam ārttaṉaṉ;
iḷa varik kavaṭṭilai āroṭu ēr peṟat
tuḷavoṭu tumpaiyum cuḻiyac cūṭiṉāṉ.