கம்பராமாயணம் 7175 · யுத்த 14.117

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மால்கடல் வண்ணன் - கரிய கடல் போலும் நிறத்தன் ஆன திருமால்; தான் வளரும் - தான் (அறிதுயிலாய்க்) கண் வளர்கின்ற; மால் இரும் - மிகப் பெரிய; பாற்கடலோடும் வந்து - திருப்பாற் கடலோடும் வந்து; எதிரும் பான்மை போல் - எதிர்ப்பட்டாற் போலே; நாற்கடல் உலகமும் - நாற்புறமும் கடல் சூழ்ந்த இவ்வுலகத்து மக்களும்; விசும்பும் - விண்ணுலகத் தேவர்களும்; நாண்மலர் தூர்க்க - அன்றலர்ந்த மலர்களைச் சொரிந்து பூமியை நிறைக்க; வெம் சேனையும் தானும் தோன்றினான் - கொடிய வானரச் சேனையும் தானுமாகத் தோன்றினான்.

தம் இடர் தீர, பெருமான் வில்லேந்தி விட்டான் என்ற மகிழ்ச்சியில் மக்களும் தேவரும் அவன் மேல் சொரிந்த மலர்மழை பூமியை நிறைத்தது என்பார். “நாண்மலர் தூர்க்க” என்றார். நாள்மலர் அன்று அலர்ந்த மலர் வெண்ணிறமுடைய வானர சேனைக்குப் பாற்கடல் உவமையாக முன்பும் கூறினார். பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரந்தாமனை அப்பாற்கடலோடும் புறப்பட்டு, இராவணன் முன் நேரில் எதிர்ப்பட்டது போல், வானர சேனையோடு பெருமான் தோன்றினான் என்றவாறு தன்மைத் தற்குறிப்பேற்றவணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the world ringed by four seas and the sky heaped fresh blossoms,
  2. he appeared, he and his fierce army,
  3. as though he of the hue of the dark sea had come to meet the foe
  4. together with the vast, great Sea of Milk where he lies in sleep.

What the poem says

Irāmaṉ comes onto the field at the head of the monkey army. The people of earth and the gods of heaven, overjoyed that the Lord has taken up his bow to end their troubles, shower so many fresh flowers that the ground is buried.

It is as if Viṣṇu, dark as the sea, had risen from the Sea of Milk where he sleeps and brought that ocean with him to face Irāvaṇaṉ: the pale monkey host is the milky sea around its dark lord.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nāṟ kaṭal ulakamum vicumpum nāḷmalar
tūrkka veñ cēṉaiyum tāṉum tōṉṟiṉāṉ
māl kaṭal vaṇṇaṉ tāṉ vaḷarum māl irum
pāṟkaṭalōṭum vantu etirum pāṉmaipōl.