கம்பராமாயணம் 7176 · யுத்த 14.118

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஊழியின் - யுக முடிவுக் காலத்தில்; தான் - இராமன் வடிவிலுள்ள பரம்பொருளே; உருத்திரன் உருவு கொண்டு - உருத்திரன் வடிவம் எடுத்துக் கொண்டு; உயர் ஏழ் உலகமும் எரிக்கின்றான் என - சிறந்த ஏழ் உலகங்களையும் எரியால் அழிப்பான் போல; மாப்படையின் கூழையின் நெற்றி நின்றான் - பெரிய குரங்குச் சேனையினுடைய பின்னணியின் முன் நின்றவனான; வாழிய வரிசிலைத் தம்பியை - வாழ்த்தற்குரிய கட்டமைந்த வில்லை ஏந்தி நின்ற தம்பி இலக்குவனை; கூடினான் - அடைந்தான்.

இராமனாக வந்துள்ள பரம்பொருளே அயனாகப் படைத்தும், அரியாகக் காத்தும், அரனாக அழித்தும் நிற்கிறது. ஆதலின், “ஊழியின் உருத்திரன் உருவு கொண்டுதான், ஏழ்உயர் உலகமும் எரிக்கின்றான்” என்றார் “உடம்பு உருவின் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறாய், உலகு உய்ய நின்றானை” (பெரிய திரு.2:4:3); “மூவருமாய் முதலாய மூர்த்தி” (பெரிய திரு. 4:1:2); “தன்னாலே தன் உருவம் பயந்த தானாய்” (பெரிய திரு: 6:60); “தானேயாகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானேயாய்த் தானே யரன் என்பானாகி” (திருவாய்:9:7:2); “தானும் சிவனும் பிரமனும் ஆகிப் பணைத்த தனிமுதலை” (திருவாய்: 8:8:4); - இந்த ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் இங்கு நினையத்தக்கவை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if at the end of the age he himself had taken Rudra's form
  2. and were burning all the seven lofty worlds,
  3. he joined his brother of the banded bow, may he prosper,
  4. who stood at the front of the rearguard of the great army.

What the poem says

Irāmaṉ goes to join his brother Ilakkuvaṉ, who stands with his bow at the head of the army's rear division. He looks like the Supreme Being taking the form of Rudra at the end of an age to burn up the seven worlds.

The commentary explains that the one Supreme Being creates as Piramaṉ, protects as Viṣṇu and destroys as Rudra, and cites the Āḻvārs' hymns to the same effect.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ūḻiyiṉ uruttiraṉ uruvukoṇṭu tāṉ
ēḻ uyar ulakamum erikkiṉṟāṉ eṉa
vāḻiya vari cilait tampi māp paṭaik
kūḻaiyiṉ neṟṟi niṉṟāṉai kūṭiṉāṉ.