கம்பராமாயணம் 7177 · யுத்த 14.119

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்புழி நிருதராம் ஏழு வேலையும்
மின்பொழி எயிறு உடை கவியின் வெள்ளமும்
தென்புலக் கிழவனும் செய்கை தீட்டிடப்
புன்புலக் களத்திடைப் பொருத போலுமால்.

பொருள் · Meaning in Tamil

என்புழி - இவ்வாறு இராவணனும் இராமபிரானும் களத்தில் தோன்றினர் என்னும் போதே; தென்புலக் கிழவனும் கீழ்ப்பட - தெற்குத் திக்குக்குரியவனான எமனும் (தன் செயலாகிய) கொலைத்தொழில் தாழ்ந்தது என்னுமாறு; நிருதராம் ஏழுவேலையும் - அரக்கர்களாகிய ஏழுகடல்களும்; மின்பொழி எயிறு உடைக்கவியின் வெள்ளமும் - ஒளியுமிழும் பற்களையுடைய குரங்குப் படையாகிய வெள்ளமும்; புன்பலக் களத்திடைப் பொருத போலும் - இகழத்தக்க இலங்கைக் களத்திடையே தம்முட் போரிடலாயின. தென்திசைக்குரிய யமனும் நாண போர்க்களத்தில் கொலைச் செயலும் உயிர் கவர்தலும் தொடங்கின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Even as this was said, the seven seas that were the demons
  2. and the flood of monkeys with lightning-flashing teeth
  3. clashed on that wretched field,
  4. so that even the lord of the southern realm fell short in his work.

What the poem says

With both Irāvaṇaṉ and Irāmaṉ on the field, the two armies crash together: the demons like the seven oceans, the monkeys a flood of gleaming teeth. The killing is so great that Yama, Death, lord of the south, is put to shame; his own work of slaughter looks small beside it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉpuḻi nirutarām ēḻu vēlaiyum
miṉ poḻi eyiṟuṭaik kaviyiṉ veḷḷamum
teṉ pulak kiḻavaṉum ceykai kīḻppaṭa,
puṉ pulak kaḷattiṭaip poruta pōlumāl.