கம்பராமாயணம் 7179 · யுத்த 14.121
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கடும் குரங்கு இருகையால் எற்ற - கொடிய வானரங்கள் (தமது) இரண்டு கைகளாலும் தாக்கியபோது; கால்வயம் கொடும் குரம் - கால் வலிமையும் வளைந்த குளம்புகளையும் உடைய; புரவி துணிந்தன - குதிரைகள் துண்டாயின; குத்தினால் - கைகள் குத்தியதனால்; நிருதர் ஒடுங்கு உரம் - அரக்கர் வலிமை குன்றிப் போன மார்பு; துணிந்தனர் - துண்டு பட்டனர்; நெடுங்குரம்பு என - பெரிய அணைக்கட்டிலிருந்து நீர் பெருக்கெடுப்பது போன்று; நின்ற குருதி நீத்தம் ஓடின - (போர்க்களத்தில்) நிறைந்திருந்த இரத்த வெள்ளங்கள் பாய்ந்தோடின.
கொடுங்குரம் - வளைந்த குளம்பு. குரம்பு - அணை நீர்த்தேக்கம். அரக்கரும், குதிரையும் இரத்தம் தேங்கிய அணைக்கட்டுப் போன்றிருந்தனர்; வானரங்களின் தாக்குதலால் அணைகளிலிருந்து பெருகிய வெள்ளம் போல, குருதி வெள்ளம் களம் எங்கும் பெருக்கெடுத்து ஓடியது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the fierce monkeys struck with both hands, the horses
- with strong legs and curved hooves were cut apart; by their punches
- the demons, their chests caved in, were broken; and there ran,
- as from a high dam, brimming floods of blood.
What the poem says
The monkeys fight with their bare hands. Their blows break the strong-legged horses and smash in the demons' chests.
The demons and horses are pictured as dams holding back blood. Once the monkeys breach them, it gushes out across the field like water from a burst reservoir.