கம்பராமாயணம் 7180 · யுத்த 14.122
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இது தெற்கு இது வடக்கு என்னத் தேர்கிலார் - இது தென்திசை இது வடதிசை என்று அறிய இயலாதவாறு; பல்குவை பரந்தன - (பிணக்) குவியல்கள் பல பரவிக் கிடந்தன; குரங்குப் பல் பிணம் - குரங்குகளின் பிணங்கள் பல; பொன் குவை நிகர்த்தன - (வெண்) பொன்னாகிய வெள்ளிக் குவியலைப் போன்று தோன்றின; போர் நிருதர் சவம் - போரிட்ட அரக்கர்களின் பிணங்கள்; கல்குவை நிகர்த்தன - கற்குவியல்களைப் போன்று (குவிந்து) கிடந்தன; மழையும் காட்டின - (மேலும் அவை) மேகக் கூட்டம் போன்றும் காட்சியளித்தன.
பொன் - இங்கு வெண் பொன் ஆகிய வெள்ளியைக் குறித்தது. இரு வகைப் பிணக் குவியல்களிலிருந்தும் இரத்தம் பெருகி ஓடுதலால், “மழையும் காட்டின” என்றார். எனலும் பொருந்தும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Countless heaps spread out, so that one could not tell
- “this is south, this is north”; the many monkey corpses
- were like heaps of silver; the bodies of the demons slain in battle
- were like heaps of stones; and they looked like rain clouds too.
What the poem says
The dead lie in heaps so thick that nobody can tell north from south. The pale monkey bodies look like piles of silver and the dark demon bodies like piles of stone. With blood streaming from both, they also look like rain clouds.