கம்பராமாயணம் 7181 · யுத்த 14.123
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அவ்வழி - (அவ்வாறு இராக்கதர் பேரழிவு எய்திய) அப்போது; இராவணன் அமரர் அஞ்ச - இராவணன் ஆனவன் தேவர்கள் அஞ்சுமாறு; தன் வெவ்விழி நெருப்புஉக - தன்னுடைய கொடிய கண்களிலிருந்து தீப்பொறி சிந்த; வில்லின் நாணினை - வில்லினுடைய நாண் கயிற்றை; செவ்வழி கோதையில் தெறிக்க - செம்மையான முறையில் கையுறையில் உராயுமாறு தெறித்த போதினில்; இரிந்த வானரம் - அஞ்சி ஓடிய குரங்குகள்; எவ்வழி மருங்கினும் சிந்தின - எல்லாத் திசை வழிகளிலும் சிதறின.
நாண் ஓசையால் பகைவரை அச்சுறுத்துதல் வழக்கு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Then Irāvaṇaṉ, so that the immortals feared,
- with fire spilling from his cruel eyes, twanged
- his bowstring true against his arm-guard, and the monkeys
- fled and scattered on every road and side.
What the poem says
While his demons are being slaughtered, Irāvaṇaṉ steps in. Eyes flashing fire, he twangs his bowstring against his arm-guard, and the sound alone frightens the gods and sends the monkeys running in every direction. Warriors traditionally sounded the bowstring to terrify the enemy.