கம்பராமாயணம் 7182 · யுத்த 14.124
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உரும் இடித்துழி - இடியிடித்த போது; உலைந்து ஒளிக்கும் நாகம் ஒத்து - வருந்தி ஒளிந்து கொள்ளும் நாகப் பாம்பினைப் போல; சில - சில குரங்குகள்; இரியல் உற்றன - (தறிகெட்டு) ஓடின; சில இறந்தன - சில குரங்குகள் இறந்து ஒழிந்தன; சில வெருவல் உற்றன - சில பேரச்சம் அடைந்தன; சில விம்மல் உற்றன - சில குரங்குகள் விம்மி அழுதன; சில பொருகளத்து உயிரொடும் புரண்டுபோம் - சில குரங்குகள் போர்க்களத்தில் (வீழ்ந்து) உயிருடன் புரண்டு ஓடின.
இடி ஓசைக்குப் பாம்புகள் அஞ்சுதலும் இறத்தலும் உண்டு; “உத்தி அரவின் பைந்தலை துமிய” (அகநா: 202) “விரிறெ நாகம் விடர்உளதேனும் உருமின் கடுஞ்சினம் சேண் நின்றும் உட்கும்” (நாலடி 104).
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like cobras that cower and hide when the thunder crashes,
- some fled; some died;
- some were terrified; some sobbed;
- some went rolling, still alive, across the battlefield.
What the poem says
The sound of Irāvaṇaṉ's bowstring hits the monkeys the way a thunderclap hits snakes. Some run, some drop dead, some freeze in terror, some weep, and some roll about on the field, alive but helpless.
Tamil poetry often says that snakes are terrified, even killed, by thunder.