கம்பராமாயணம் 7183 · யுத்த 14.125

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பொர கருநிற நெடு விசும்பு போழ்பட
இரக்கம் இல் இராவணன் எறிந்த நாணினால்
குரக்கினம் உற்றது என் கூறல்? தன் குலத்து
அரக்கரும் அனையது ஓர் அச்சம் எய்தினார்.

பொருள் · Meaning in Tamil

பொர - போர்புரியும்படி; இரக்கமில் இராவணன் - இரக்கப் பண்பு அற்ற அரக்கனாகிய இராவணன்; கருநிற நெடு விசும்பு போழ்பட - கருநிறமுடைய நீண்ட ஆகாயமும் பிளவு படும்படி; எறிந்த நாணினால் - எழுப்பிய நாண் ஒலியால்; கூறின் - கூறுங்கால்; தன்குலத்து அரக்கரும் - தன் குலத்தைச் சார்ந்த அரக்கர்களும்; அனையதோர் அச்சம் எய்தினார் - (வாயால் கூற இயலாத) அத்தகையதோர் அச்சம் அடைந்தனர் (என்றால்) குரக்கினம் உற்றது என்? - குரங்குக் கூட்டம் அடைந்த நிலையைக் கூறுவது எப்படி?

இராவணனிடம் எல்லாமிருந்தும் இல்லாத ஒன்று இரக்கம் ஆதலின், “இரக்கமில் அரக்கன்” என்றார். “இரக்கம் ஒன்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர் அரக்கர்” (கம்ப. 2642) என்பார் முன்னும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. By the bowstring the pitiless Irāvaṇaṉ twanged for battle,
  2. so that the long dark sky was split open,
  3. why speak of what befell the monkey tribe? The demons
  4. of his own race were struck with such a fear.

What the poem says

Irāvaṇaṉ's bowstring is so loud it seems to split the sky. Even his own demons are seized with unspeakable fear, so there is no need to describe what the monkeys went through.

He is called “pitiless” because pity is the one thing he lacks; an earlier verse calls the demons “those whose hearts hold no such thing as pity.”

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pora karu niṟa neṭu vicumpu pōḻpaṭa
irakkam il irāvaṇaṉ eṟinta nāṇiṉāl
kurakkiṉam uṟṟatu eṉ kūṟiṉ? taṉ kulattu
arakkarum aṉaiyatu ōr accam eytiṉār.