கம்பராமாயணம் 7184 · யுத்த 14.126

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வீடணன் ஒருவனும் இளைய வீரனும்
கோடு அணை குரங்கினுக்கு அரசும் கொற்றவன்
நாடினர் நின்றனர்; நாலு திக்கினும்
ஓடினர் அல்லவர்; ஒளித்தது உம்பரே.

பொருள் · Meaning in Tamil

வீடணன் ஒருவனும் - வீடணன் எனும் ஒப்பற்றவனும்; இளைய வீரனும் - இளைய வீரனான இலக்குவனும், கோடு அணை குரங்கினுக்கு அரசும் - மரக்கிளைகளில் உலாவும் குரங்குகளின் தலைவனான சுக்கிரிவனும்; கொள்கையால் நாடினர் நின்றனர் - வீரக் கொள்கை நெறியை எண்ணி நின்றனர்; அல்லவர் - இவர்கள் அல்லாதவர்கள்; நாலு திக்கிலும் ஓடினர் - நான்கு திசைகளிலும் ஓடினர்; உம்பர் ஒளித்தது - வான் உலகோரும் மறைந்து கொண்டனர்

உம்பர்வானம் இட ஆகு பெயராய்த் தேவரைக் குறித்தது. ஒளிந்த இழிவினால் தேவர்க்கு அஃறிணை முடிபு தந்தார் எனினுமாம். போர் வீரர் கோட்பாட்டின் படி உறுதியாக நின்றனர். விழித்த கண் வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின் ஓட்டன்றோ வன்கண் அவர்க்கு என்ற குறள் (775) வீரக் கோட்பாட்டினை உணர்த்தும். இம்மூவரின் உறுதி சொல்லவே நாயக இராமன் பற்றிச் சொல்லவேண்டாதாயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Vīṭaṇaṉ alone, the younger hero,
  2. and the king of the monkeys who cling to boughs,
  3. held to their code and stood their ground; all the others
  4. ran to the four quarters; and the heavens hid.

What the poem says

Only three stand firm against the terror: Vīṭaṇaṉ, Ilakkuvaṉ and Cukkirīvaṉ, king of the monkeys. They keep to the warrior's code, which the Tirukkuṟaḷ sums up as not even blinking when a spear is hurled at one's open eye. Everyone else runs, and even the gods in heaven hide.

If these three held firm, there is no need to say that Irāmaṉ did.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vīṭaṇaṉ oruvaṉum iḷaiya vīraṉum
kōṭu aṇai kuraṅkiṉukku aracum koḷkaiyāl
nāṭiṉar niṉṟaṉar; nālu tikkiṉum
ōṭiṉar allavar; oḷittatu umparē.