கம்பராமாயணம் 7185 · யுத்த 14.127

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எடுக்கின் - பெயர்த்தெடுக்க (வேண்டும் என விரும்பினால்); நானிலத்தை ஏந்தும் - இவ்வுலகையே எடுத்து ஏந்தவல்ல; இராவணன் - இராவணன் ஆனவன்; எறிந்த நாணால் - தெறித்து எழுப்பிய நாண் ஒலியால்; உலகை நடுக்கினான் என்பர் - இப்பூவுலகை மட்டும் நடுங்கச் செய்து விட்டான் என்று (சிலர்) சொல்வார்கள்; நல்கினான் என்னற்பாற்றோ - (வானுலகுக்கு விலக்களித்து) நலஞ்செய்து விட்டான் என்று கூற இயலுமோ? (இயலாது); (ஏன்எனில்) மிடுக்கினால் மிக்க வானோர் - வல்லமை மிக்க தேவர்கள்; மேல்நாள் மேக்கு உயர்வெள்ளம் - முன்னாளில் மேலே உயர்ந்து எழுகின்ற பிரளய வெள்ளம்; கெடுக்கும் நாள் - அழிக்கும் போது; உருமின் ஆர்ப்புக் கேட்டனர் என்ன - (ஊழிக்காலத்து மேகத்திடையே) இடியின் ஒலி கேட்டது போல; கேட்டார் - அந்நாண் ஒலியைக் கேட்டு நடுங்கினர் (ஆதலின்).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. People say that Irāvaṇaṉ, who could lift the four-fold earth if he wished, shook the world
  2. with the bowstring he twanged; can one say he spared the rest?
  3. The gods, great in their might, heard it as they once heard
  4. the roar of thunder on the day the rising flood destroys all.

What the poem says

Some say Irāvaṇaṉ's bowstring shook only the earth. The poet replies that he spared nothing. The mighty gods in heaven heard it too, and to them it sounded like the thunder that breaks out at the end of an age, when the cosmic flood rises to destroy the world.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṭukkiṉ, nāṉilattai ēntum irāvaṇaṉ eṟinta nāṇāl
naṭukkiṉāṉ, ulakai eṉpār; nalkiṉāṉ, eṉṉaṟpāṟṟō?
miṭukkiṉāl mikka vāṉōr, mēkku uyar veḷḷam mēlnāḷ
keṭukkum nāḷ urumiṉ ārppuk kēṭṭaṉar eṉṉak kēṭṭār.