கம்பராமாயணம் 7186 · யுத்த 14.128
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கவிக்குலத்து அரசன் - குரங்கினத்து மன்னன் ஆகிய சுக்கிரீவன்; அங்கு - அப்பொழுது; காந்திய உருமின் - உக்ரமானதோர் இடி போன்ற; ஏந்திய சிகரம் ஒன்று - கையில் ஏந்தியுள்ள மலைச்சிகரம் ஒன்றினை; இந்திரன் குலிசம் என்ன - தேவேந்திரனின் வச்சிராயுதத்தைப் போல; விட்டான் - வீசி எறிந்தான்; அக்கல் - அந்த மலைச்சிகரம்; நீந்த அரு நெருப்புச்சிந்தி - நீந்துதற்கு இயலாத நெருப்பு வெள்ளத்தைச் சொரிந்தவாறு; நிமிர்தலும் - மேல் வந்தபோது; நிருதர்க்கு எல்லாம் வேந்தனும் - உலகில் உள்ள அரக்கர்க்கு எல்லாம் வேந்தனாகிய இராவணனும்; பகழி ஒன்றால் - அம்பு ஒன்றினால், வெறுந்துகள் ஆக்கி வீழ்த்தான் - வெற்றுப் பொடியாக ஆக்கித் தள்ளினான்.
சுக்கிரீவன் வீசிய மலை ஒன்றினை இராவணன் எளிதாக ஓரம்பினால் பொடியாக்கினான் என்பதாம். சுக்ரீவனுக்கு மலை; இராவணனுக்குச் சாம்பல் என்று அவன் உரம் விளக்கியவாறு. குலிசம் - வச்சிராயுதம், இந்திரன் கையில் உள்ளது. நெருப்பு வெள்ளம், நீர் வெள்ளம் போல, நீந்துதற்கு அரியது ஆதலின், “நீந்தரு நெருப்புச் சிந்தி” என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The king of the monkey tribe hurled a peak he had lifted there,
- like Intiraṉ's thunderbolt, like a blazing lightning-stroke; and as that rock
- came on, scattering fire no one could swim through,
- the king of all the demons, with a single arrow, made it mere dust and brought it down.
What the poem says
Cukkirīvaṉ hurls a mountain peak at Irāvaṇaṉ. It flies like Intiraṉ's thunderbolt, trailing a flood of fire no one could swim across. With a single arrow Irāvaṇaṉ reduces it to dust.
What was a mountain to Cukkirīvaṉ is ash to Irāvaṇaṉ, and that measures the demon king's strength.