கம்பராமாயணம் 718 · பால 11.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தூநின்ற சுடர் - (பகைவரின்) தசை படிந்த ஒளிமிக்க; வேலோய் - வேலையுடைய மன்னவனே! அனந்தனுக்கும் - (ஆயிரம் முகமுடைய) ஆதிசேடனுக்கும்; சொலற்கு அரிது ஏல் - (இவர்களின் குலப் பெருமையை) சொல்வது கடினம் என்றால்; யான் இன்று - (ஒரு முகமும் ஒரு நாவும் உடைய) நான் தளர்ச்சியடையாமல் இப்பொழுது; புகழ்ந்து உரைத்தற்கு - புகழ்ந்து சொல்வதற்கு; எளிதோ - எளிதாகுமோ? (ஆகாது); ஏடு அவிழ் - இதழ் விரியும்; கொன்றைப் பூ நின்ற - கொன்றை மலர்களைச் சூடிய, மவுலியையும் - திருமுடியில்; புக்கு அளைந்த - வந்து பொருந்திய; புனல் - புனித நீரையுடைய; கங்கை - கங்கை நதியை; வான் நின்று - வானுலகத்திலிருந்து; கொணர்ந்தானும் - (இப் பூவுலகிற்குக்) கொண்டு வந்தவனும்; இவர் குலத்து - இச் சிறுவர்களது குலத்தில் பிறந்த; ஓர் மன்னவன் காண் - (பகீரதன் என்னும்) ஓர் அரசனே ஆவான்.
மவுலியையும் - உயர்வு சிறப்பும்மை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'O you of the bright spear stained with flesh! If even Aṉantaṉ finds it hard to tell,
- is it easy for me today to recount their praise? He who brought
- from the sky the river Kaṅkai, whose waters entered and mingled even in the crown
- that wears the opening koṉṟai flowers — know he was a king of this line.'
What the poem says
If even the thousand-headed serpent Ādiśeṣa (Aṉantaṉ) could not tell the glory of this line, how could Vicuvāmittiraṉ, with one mouth, do so? He names Bhagīratha, the king who brought the Ganges down from heaven to earth, where she fell first into the matted hair of Śiva, crowned with koṉṟai blossoms.