கம்பராமாயணம் 7189 · யுத்த 14.131
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆங்கு - அப்பொழுது; அக்கிரிதனையும் - (இராவணன்) அந்த மலையினையும்; ஓர் அம்பினால் அறுத்து மாற்றி - ஓர் அம்பினால் துண்டித்து அகற்றி; திக்கு இரிதர - திசை தோறும் (வீரர்கள்) அஞ்சி ஓடுமாறு; போர் வென்ற - போரில் வெற்றி பெற்ற; சிலையினை வளைய வாங்கி - தன் வில்லினை வளையச் செய்து; உக்கிர வயிர வாளி ஒன்று - மிகக் கடுமையும் உறுதியுமுடைய ஓர் அம்பினை; சுக்கிரீவன் தன் மார்பில் - சுக்கிரீவனுடைய மார்பிலே; புங்கமும் தோன்றா வண்ணம் - அம்பின் அடிமுனையும் புகுந்தமை தோன்றா வண்ணம்; புக்கு ஒளிக்க எய்தான் - நுழைந்து மறையும் வண்ணம் எய்தான்.
முனையும் தோன்றாதவாறு புங்கம் அம்பின் முனை (வடமொழிச் சொல்) மார்பில் அழுந்த அம்பு பாய்ச்சினான் என்பார். “புங்கமும் தோன்றாவண்ணம் புக்கு ஒளிக்க எய்தான்” என்றார். “தோளினும் ஆகத்துள்ளும் புங்கமும் தோன்றா வண்ணம்” (கம்ப. 7925) என்று அதிகாயன் வதைப்படலத்துள்ளும் இச்சொல்லை ஆண்டுள்ளார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- That hill too he cut apart there with a single arrow and turned it aside;
- bending to a curve the bow that had won wars, putting the quarters to flight,
- into Cukkirīvaṉ's chest he shot one fierce, diamond-hard arrow
- so that it went in and hid, with not even its feathered end showing.
What the poem says
Irāvaṇaṉ cuts the second hill apart with a single arrow. Then he draws his bow, which has won wars in every direction, and shoots Cukkirīvaṉ in the chest with an arrow so hard and fierce that it sinks right in, feathered end and all.
Kampaṉ uses the same phrase later, in the episode of Atikāyaṉ's death.