கம்பராமாயணம் 7190 · யுத்த 14.132

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சுடுகணை படுதலோடும் துளங்கினான்; துளங்கா முன்னம்
குட திசை வாயில் நின்ற மாருதி, புகுந்த கொள்கை
உடன் இருந்து அறிந்தான் என்ன, ஓர் இமை ஒடுங்கா முன்னர்,
வட திசை வாயில் நின்ற மன்னவன் முன்னன் ஆனான்.

பொருள் · Meaning in Tamil

சுடுகணை படுதலோடும் - (அந்த) எறி அம்புபட்டவுடன்; துளங்கினான் - சுக்கிரீவன் உடல் தளர்ந்தான்; துளங்கா முன்னம் - (அவன்) தளர்வதற்கு முன்னமேயே; புகுந்த கொள்கை உடன் உறைந்து அறிந்தான் என்ன - நிகழ்ந்த நிகழ்ச்சியைக் கூட இருந்து அறிந்தவனைப் போல; குடதிசை வாயில் நின்ற மாருதி - (கோட்டையின்) மேற்கு வாசலிலிருந்த அனுமன்; ஓர் இமை ஒடுங்கா முன்னர் - ஒரு கண் இமைப்பொழுது கழியும் முன்பே; வடதிசை வாயில் வந்து - வடக்குக் கோட்டை வாயிலுக்கு வந்து; மன்னவன் முன்னர் ஆனான் - தன் அரசனாகிய சுக்கிரீவன் முன்பு வந்து நின்றான்.

சுக்கிரீவன் தளர்வும் அனுமன் வரவும் ஒரு நிகழ்வு போல உடன் நிகழ்ந்தன. அநுமன் அறிந்துவந்த செய்தி நட்பின் உள்ளுணர்வாகும். கோப்பெருஞ்சோழன் துன்புற்று வடக்கிருந்ததை உள்ளுணர்வால் உணர்ந்து அவன்பால் வந்து சேர்ந்து வடக்கிருந்த பிசிராந்தையார் செயலை ஈண்டு நினைவு கூர்க. உணர்ச்சி தான் நட்பாம் கிழமை தரும், இடுக்கண் களைவதாம் நட்பு என்ற வாசகங்களையும் நினைக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the burning arrow struck he reeled; but before he could reel,
  2. Māruti, who stood at the western gate, as though he had been there
  3. and known what happened, before an eyelid could close,
  4. came to the northern gate and stood before his king.

What the poem says

Cukkirīvaṉ staggers under the arrow. Before he can even fall, Aṉumaṉ, son of the wind god, who was fighting at the western gate, is in front of his king at the northern gate, faster than the blink of an eye, as if he had been there all along.

The commentary takes this as the instinct of true friendship and recalls the Tamil story of the poet Picirāntaiyār, who sensed from far away that his friend King Kōpperuñcōḻaṉ had begun a fast unto death and came to die beside him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cuṭu kaṇai paṭutalōṭum tuḷaṅkiṉāṉ; tuḷaṅkāmuṉṉam
kuṭa ticai vāyil niṉṟa māruti, pukunta koḷkai
uṭaṉ uṟaintu aṟintāṉ eṉṉa, ōr imai oṭuṅkāmuṉṉar,
vaṭa ticai vāyil vantu maṉṉavaṉ muṉṉar āṉāṉ.