கம்பராமாயணம் 7191 · யுத்த 14.133
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பருவலி அரக்க! - மிக்க வலிமை வாய்ந்த அரக்கனே! பரிதி சேய் தேறா முன்னம் - சூரியன் மகனான சுக்கிரீவன் தெளிவு பெறுவதற்கு முன்னாக; என்னோடு பல்போர் புரிதியோ? - என்னுடன் பல்வகையான போர் வகைகளைப் புரிய உள்ளாயோ? என்ன - என்று (அனுமன் இராவணனைக் கூவியழைக்க); புகை எழ விழித்துப் பொங்கி - (விழிகளில்) புகை எழுமாறு கடுமையோடு விழித்துச் சினம் பொங்கி; வருதியேல் வா வா என்பான் மேல் - வருவதாயின் வருக வருக என்று கூறும் இராவணன் மேல்; காலின் தோன்றல் - வாயு புத்திரனான அனுமன்; மலை ஒன்று வாங்கி - அடியோடு பெயர்த்தெடுத்து; சுருதியே அனைய தோளால் வீசினான் - வேதங்களை ஒத்த தன்னுடைய புயங்களால் வீசி எறிந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Before the Sun's son recovers, demon of massive strength, will you fight
- many kinds of battle with me?” he said; and at the one who, glaring
- so that smoke rose, boiling over, cried “If you are coming, come, come!”,
- the scion of the Wind tore up a mountain and hurled it with shoulders like the Vedas.
What the poem says
Aṉumaṉ challenges Irāvaṇaṉ to fight him before Cukkirīvaṉ, son of the Sun, can recover. Irāvaṇaṉ, eyes smoking with fury, shouts back: “If you're coming, come on!” Aṉumaṉ uproots a mountain and throws it at him.
Aṉumaṉ's shoulders are compared to the Vedas because both are vast, firm and beyond measure.