கம்பராமாயணம் 7193 · யுத்த 14.135

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மீட்டு ஒரு சிகரம் வாங்கி - (அனுமன்) மீண்டும் ஒரு மலையை எடுத்து; வீங்கு தோள் விசையின் வீசி - பருத்த தோள்களின் விசையினால் வீசி; ஓட்டினான் - செலுத்தினான்; ஓட்ட - (அவ்வாறு) செலுத்திய போது; உருமினும் கடுக ஓடி - (அம்மலை) விண்ணிலிருந்து வீழும் இடியை விட வேகமாகச் சென்று; கோட்டுவெம் சிலையின் - வளைந்த கொடிய வில்லிலிருந்து; வாளி முன் சென்று - (அரக்கன் எய்ய இருந்த) அம்புகட்கு முன்பாகச் சென்று; கொற்றப் பொன்தோள் - இராவணனது வெற்றிமிக்க தோளில்; பூட்டிய வலயத்தோடும் - அணிந்திருந்த வாகு வலயத்தோடும்; பூழியாய்ப் போயிற்று - (தானும்) புழுதியாய்ப் (பொடிந்து) போயிற்று.

மலையில் பட்டு, தோள்வளை பொடியாயிற்று. தோள் வளை பட்டு, மலை பொடியாயிற்று என்பதனால் இரண்டின் வலிமையும் ஒரு சேரக்குறித்த திறம் காண்க. அன்று, ஏ - அசை

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Again he took up a peak and, with the force of his swelling shoulders, hurled it
  2. and sent it on; sent on, it ran faster than the thunderbolt in the sky,
  3. outran the arrows of the cruel curved bow,
  4. and turned to dust, together with the armlet fastened on that victorious golden shoulder.

What the poem says

Aṉumaṉ throws another peak, faster than a thunderbolt, and this time it beats Irāvaṇaṉ's arrows to the mark. It hits his shoulder, and both the mountain and the gold armlet he wears there are smashed to powder.

The mountain crushes the armlet and the armlet crushes the mountain, so the verse shows the strength of both at once.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mīṭṭu oru cikaram vāṅki, vīṅku tōḷ vicaiyiṉ vīci,
ōṭṭiṉāṉ; ōṭṭa, vāṉattu urumiṉum kaṭuka ōṭi,
kōṭṭu veñ cilaiyiṉ vāḷi muṉ ceṉṟu, koṟṟap poṉtōḷ
pūṭṭiya valayattoṭum pūḻiyāyp pōyiṟṟu aṉṟē.