கம்பராமாயணம் 7194 · யுத்த 14.136
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வெங்கணான் - கொடிய கண்களையுடைய இராவணன்; விம்மி - மனம் வெதும்பி; மீட்டு ஓர் மை வரை வாங்குவானை - மறுபடியும் ஒரு கரிய மலையைப் பெயர்க்கத் தொடங்கியுள்ள அனுமனை (நோக்க); மெய் எரிந்து - உடல் கொதிக்க; அழன்று பொங்கி - வெகுண்டு எழுந்து; வரிசிலை வளைய வாங்கி - கட்டமைந்த வில்லை வளையச் செய்து; கையினும் தோளின் மேலும் மார்பினும் கரக்க - (அநுமனுடைய) கைகளிலும், தோள்களிலும், மார்பிலும் மறையுமாறு; ஐ இரண்டு வாளி அழுந்த எய்தான் - பத்துப் பாணங்களை அழுத்தமாக அடித்தான்; அவன் - அந்த அனுமனோ; அவை - அந்தக் கணைகளை; ஆற்றி நின்றான் - பொறுத்துக் கொண்டு நின்றான்.
கை இரண்டு, தோள் இரண்டு, மார்பு ஒன்று ஆகிய ஐந்து உறுப்புகட்கும் ஒவ்வொன்றுக்கு இரண்டாகப் பத்துக் கணைகள் எய்தான் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- His body burning, raging, boiling over, the cruel-eyed one, seething,
- at him who was again tearing up a dark mountain, bent his banded bow
- and shot ten arrows to sink deep and vanish
- into his hands, his shoulders and his chest; and he stood and bore them.
What the poem says
As Aṉumaṉ bends to tear up yet another mountain, Irāvaṇaṉ, burning with rage, shoots ten arrows into him, two each into his hands, his shoulders and his chest, so deep they disappear. Aṉumaṉ simply stands and takes them.