கம்பராமாயணம் 7195 · யுத்த 14.137

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

யார் இது செய்ய கிற்பார்? - (அனுமன் கணைகளைத் தாங்கி நின்ற அருமையைக் கண்டு) யாரே இத்தகைய செயலைச் செய்ய வல்லார்?; என்று கொண்டு - என்று உரைத்துக்கொண்டே; இமையோர் ஏத்த - தேவர்கள் போற்றிப் புகழ; மாருதி - அனுமன்; பின்னும் - பிறகும்; அங்கு - அவ்விடத்தே (இருந்த); ஓர் மராமரம் - ஒரு மராமரத்தை; வேரொடும் கையின் வாங்கி - வேரொடும் பெயர்த்துத் தன் கைகளில் கொண்டு; சுழற்றி விட்டான் - சுழலச் செய்து வீசினான்; விடுதலும் - (அவ்வாறு) சுழற்றி வீசியவுடன்; இலங்கை வேந்தன் - (அது) இலங்கை வேந்தனாகிய இராவணனுடைய; சாரதி தலையைத் தள்ளி - தேர்ப்பாகனின் தலையைத் துண்டித்து; நிருதர் சாயச் சென்றது - அரக்கர்களும் அழியுமாறு சென்று வீழ்ந்தது.

சுழற்றி வீசிய பொருள், குறியை மட்டுமன்றி, அருகிருக்கும் பொருள்களையும் வீழ்த்தும், ஆதலின், மாருதி வேரொடு சுழற்றிவிட்ட மராமரம் தேர்ப்பாகனை மட்டுமன்றி, அருகிருந்த அரக்கர் பலரையும் அழித்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the gods above praised him, saying “Who could do such a thing?”,
  2. Māruti then took a marā tree there in his hand
  3. and, whirling it with its roots, let it fly; and as he let it go,
  4. it struck off the head of the Laṅkā king's charioteer and went on, felling demons.

What the poem says

The gods, amazed that Aṉumaṉ can stand ten arrows without flinching, cry out in praise. Aṉumaṉ uproots a marā tree, whirls it round and lets go. It takes off the head of Irāvaṇaṉ's charioteer and keeps going, mowing down the demons nearby, as a whirled weapon will.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1yār itu ceyyakiṟpār? eṉṟu koṇṭu imaiyōr ētta
māruti, piṉṉum āṅku ōr marāmaram kaiyiṉ vāṅki
vēroṭum cuḻaṟṟi viṭṭāṉ; viṭutalum, ilaṅkai vēntaṉ
cārati talaiyait taḷḷic ceṉṟatu nirutar cāya.