கம்பராமாயணம் 7196 · யுத்த 14.138

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மாறி ஓர் பாகன் ஏற - (இறந்த சாரதிக்கு) மாறாக ஒரு தேர்ப்பாகன் (தேரில்) ஏற; மறிதிரைப்பரவை பின்னும் சீறியது அனையன் ஆன - மீண்டும் மீண்டும் மோதுகின்ற அலைகளையுடைய கடல் மீண்டும் சினந்தெழுந்தாற் போன்றவனான; செறிகழல் அரக்கன் - வீரக்கழல்கள் செறிந்த இராவணன்; தெய்வ நூறுகோல் - தெய்வ அம்புகள் நூற்றினை; நொய்தின் எய்தான் - எளிதில் விடுத்தான்; அவை உடல் நுழைதலோடும் - அந்நூறு அம்புகளும் அனுமன் உடலுக்குள் நுழைந்தபோது; ஆறுபோல் சோரி சோர - நதி வெள்ளம் போல் குருதி பெருக; அனுமனும் அலக்கண் உற்றான் - அனுமனானவனும் துன்பம் அடைந்தான்.

தேர்ப்பாகன் இறந்தவுடன் “மாறி ஓர் பாகன் ஏற” என்றதனால், “சேமப்பாகர்” ஆயத்த நிலையில் இருக்கும் போர் மரபு சுட்டினார். முந்தையவை பத்து அம்புகள்; இவை நூறு அம்புகள். முந்தையவை எளிய அம்புகள்; இவை தெய்வங்களிடமிருந்து வரத்தால் பெற்றவை; ஆதலால், “அனுமனும் அலக்கண் உற்றான்” என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As another charioteer mounted in his place, the demon of the close-set anklets,
  2. like the sea of rolling waves raging once more,
  3. swiftly shot a hundred divine shafts; and as they entered his body,
  4. blood poured out like a river, and even Aṉumaṉ was in distress.

What the poem says

A reserve charioteer takes the dead man's place at once, which shows that armies kept such men ready. Irāvaṇaṉ, surging like a stormy sea, now shoots a hundred divine arrows, weapons granted by the gods, not the ordinary ten of before. They drive into Aṉumaṉ, blood pours from him like a river, and for the first time even he is in pain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māṟi ōr pākaṉ ēṟa, maṟi tiraipparavai piṉṉum
cīṟiyatu aṉaiyaṉ āṉa ceṟi kaḻal arakkaṉ, teyva
nūṟukōl noytiṉ eytāṉ; avai uṭal nuḻaitalōṭum,
āṟupōl cōri cōra, aṉumaṉum alakkaṇuṟṟāṉ.