கம்பராமாயணம் 7197 · யுத்த 14.139
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நும் வாய்ச் சொல் கொண்டும் - உங்கள் வாய்க்கு வந்தவாறு பிதற்றிக் கொண்டும்; கல் கொண்டும் மரங்கள் கொண்டும் - கற்களைக் கொண்டும் மரங்களைக் கொண்டும்; மயிரின் புன்தோல் தோள் கொண்டும் - மயிர் அடிந்த அற்பமான தோலுடைய தோள்களைக் கொண்டும்; வெள்ளிப் பல் கொண்டும் - வெண்மையான பற்களைக் கொண்டும்; துள்ளி களித்து மலைகின்றாரில் - தடுத்து வெறியேறி போர் செய்கின்ற உங்களிடத்தில்; (நான் வில் முதலிய போர்க்கருவிகளைக் கொண்டு போர் புரிவதால் வரும்) பழி கொண்டு பயந்தது - பழியைக் கொண்டே (இது காறும்) நான் பயந்திருந்தது; யான் ஓர் வில் கொண்டு நின்றபோது - நான் ஒரு வில்லைக் கையில் ஏந்திக்கொண்டு போர் செய்ய நின்றால்; விறல் கொண்டு மீள்திர் போலாம்? - குரங்குகளாகிய நீங்கள் வெற்றி கொண்டு திரும்பிப் போய் விடுவீர்களோ?
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Against those who fight with stones and with trees and with hands, gleefully,
- with the words of your mouths, with shoulders of mean hairy hide,
- leaping, and with silver teeth, I held back only for fear of the shame;
- now that I stand with a bow, will you go home with victory?”
What the poem says
Irāvaṇaṉ taunts the monkeys. They fight with rocks, trees, bare hands, teeth and empty boasts. Until now he held back only because it seemed shameful for a warrior to turn real weapons on such creatures. Now that he has taken up his bow in earnest, do they really think they can win and go home?