கம்பராமாயணம் 7198 · யுத்த 14.140

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்று த்து, எயிற்றுப் பேழ்வாய் எரி உக நகை செய்து, யாணர்ப்
பொன் தொடர் வடிம்பின் வாளி கடை உகத்து உருமு போல
ஒன்றின் ஒன்று அதிகம் ஆக, ஆயிர கோடி உய்த்தான்;
சென்றது குரங்குச் சேனை, கால் எறி கடலின் சிந்தி.

பொருள் · Meaning in Tamil

என்று உரைத்து - என்று இராவணன் கூறி; எயிற்றுப் பேழ்வாய் எரிஉக நகை செய்து - (வளைந்த கோரைப்) பற்களையுடைய பிளந்த வாயிலிருந்து நெருப்புச் சிந்துமாறு சிரித்து; கடை உகத்து உருமுப் போல - ஊழிக்காலத்து இடி போன்றவனாய், யாணர் தொடர் பொன் - புதிய பொன்னினால் (செய்த); வடிம்பின் ஆயிர கோடி வாளி - கூர்மையான ஆயிரங் கோடி அம்புகளை; ஒன்றின் ஒன்று அதிகமாக உய்த்தான் - ஒன்றை விட ஒன்று விஞ்சுமாறு செலுத்தினான்; கால் எறி கடலில் - (அதனால்) (புயல்) காற்றால் மோதுண்ட கடல் போல; குரக்குச் சேனை சிந்திச் சென்றது - வானரப் படை சிதறிப் போயிற்று.

எயிற்றுப் பேழ்வாய் - கோரைப்பற்கள் இரண்டு வெளியே தெரியுமாறு உள்ள பிளந்த வாய்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So saying, laughing so that fire spilled from his gaping, fanged mouths,
  2. like the thunder at the end of the age, he loosed
  3. a thousand crores of arrows with fresh gold-bound shafts, each outdoing the last;
  4. and the monkey army went scattering like a sea lashed by the wind.

What the poem says

Irāvaṇaṉ laughs, and fire spills from his fanged, gaping mouths. Like thunder at the end of the world, he looses a thousand crores of gold-fitted arrows, each fiercer than the one before. The monkey army is scattered like a sea whipped up by a gale.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu uraittu, eyiṟṟup pēḻ vāy eri uka nakai ceytu, yāṇarp
poṉ toṭar vaṭimpiṉ vāḷi kaṭai ukattu urumup pōla
oṉṟiṉ oṉṟu atikam āka, āyira kōṭi uyttāṉ;
ceṉṟatu kurakkuc cēṉai, kāl eṟi kaṭaliṉ cinti.