கம்பராமாயணம் 7199 · யுத்த 14.141
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கலக்கிய அரக்கன் - (தமது படையினைக்) கலக்கம் செய்த இராவணனுடைய; வில்லின் கல்வியும் - வில்வித்தையும்; கவிகள் உற்ற அலக்கணும் - வானரங்கள் அடைந்த துன்பமும்; தலைவர் செய்த தன்மையும் - வானரப் படைத்தலைவர் புரிந்த போரின் தன்மையும்; அமையக் கண்டான் - பொருந்தக் கண்டவனாய்; இலக்குவன் - இலக்குவனானவன்; என் கைவாளிக்கு இலக்கு இவன் - என்னுடைய கை அம்புகட்கு இன்று இலக்காறெவன் இந்த இராவணன்; இவனை இன்று விலக்குவன் - இவனை இப்போதே தடுப்பேன்; என்ன - என்று கூறியவாறு; வில்லுடை மேரு என்ன - வில்லினை ஏந்திய மேருவே போல்; வந்தனன் - போர் (முனைக்கு) வந்தான்.
பொன்னிறம் பொருந்திய இலக்குவன் வில்லேந்தி வருவது, மேருமலை வில்லேந்தி வருவது போன்றிருந்தது என்று அழகுற மொழிந்தார். இல்பொருள் உவமை. “விற்கை வடவரை பாங்கு நிற்ப” (கம்ப. 6493) என முன்பும் கூறினார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Seeing fully the bowmanship of the demon who had thrown them into turmoil,
- the distress the monkeys suffered, and what their leaders had done,
- Ilakkuvaṉ said, “This one is a target for the arrows in my hand; today
- I will stop him,” and came on like Mount Mēru holding a bow.
What the poem says
Ilakkuvaṉ has watched Irāvaṇaṉ's archery, the monkeys' suffering and their leaders' struggle. He decides this enemy is a target for his own arrows and steps forward to stop him.
Golden-skinned and bow in hand, he looks like Mount Mēru carrying a bow, an imaginary simile, since mountains do not carry bows.