கம்பராமாயணம் 7200 · யுத்த 14.142

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தேயத்தின் தலைவன் மைந்தன் சிலையை நாண் எறிந்தான்; தீய
மாயத்தின் வினையை வல்லார் நிலை என்னை? முடிவில் மாரி
ஆயத்தின் இடி இது என்றே அஞ்சின உலகம்; யானை
சீயத்தின் முழக்கம் கேட்டல் போன்றனர் செறுநர் எல்லாம்.

பொருள் · Meaning in Tamil

தேயத்தின் தலைவன் மைந்தன் - நாட்டிற்கெல்லாம் வேந்தனான தயரதனின் (இளைய) குமாரனான இலக்குவன்; சிலையை நாண் எறிந்தான் - வில்லின் நாணைத் தெறித்து ஒலியெழுப்பினான்; தீய மாயத்தின் இயற்கை வல்லார் - கேடு தரும் வஞ்சனை செய்வதில் இயல்பாகவே வல்லவர்களாகிய அரக்கர்களுடைய; நிலை என்ன? - நிலையை என்னென்று கூறுவது?; முடிவின் மாரி ஆயத்தின் இடி இது என்றே - யுகமுடிவில், மழை கொட்டும் மேகத்தில் எழுகின்ற பேரிடியே இது என்று கருதி; உலகம் அஞ்சின - அரக்கர் உலகங்கள் பயந்தன; செறுநர் எல்லாம் - பகைவர் எல்லாம்; யானைச் சீயத்தின் முழக்கம் கேட்டல் போன்றனர் - யானையானது சிங்கத்தின் கர்ச்சனையைக் கேட்டாற்போல ஆயினர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The son of the land's lord twanged the string of his bow; what then
  2. of those skilled by nature in evil sorcery? “This is the thunder
  3. of the massed rain clouds at the world's end,” the worlds said, and feared;
  4. all the foes were like elephants hearing a lion's roar.

What the poem says

Ilakkuvaṉ, son of King Tacarataṉ, twangs his bowstring. Every world takes the sound for the thunder of the storm clouds at the end of time and trembles, never mind the demons, those born masters of evil magic. All the enemy are like elephants hearing a lion roar.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēyattiṉ talaivaṉ maintaṉ cilaiyai nāṇ eṟintāṉ; tīya
māyattiṉ iyaṟkai vallār nilai eṉṉai? muṭiviṉ māri
āyattiṉ iṭi itu eṉṟē añciṉa ulakam; yāṉai
cīyattiṉ muḻakkam kēṭṭal pōṉṟaṉar ceṟunar ellām.