கம்பராமாயணம் 7201 · யுத்த 14.143

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘

பொருள் · Meaning in Tamil

ஆற்றல் சால் அரக்கன் தானும் - வல்லமை மிக்க இராவணனும், அருகில் நின்ற வயவர் நெஞ்சம் - (தனக்கு) அருகில் (களத்தில்) நிற்கின்ற வீரர்களின் உள்ளம்; வீற்று வீற்றாகி உற்ற தன்மையும் - வேறுவேறாகி உடைந்து நிற்கின்ற தன்மையும் (நோக்கி); வீரன் தம்பி - வீரனான இராமனுடைய தம்பி இலக்குவனுடைய; கூற்றின் வெம்புருவம் அன்ன - கூற்றுவனுடைய கொடிய புருவம் போன்ற; சிலை நெடும் குரலும் கேளா - வில் எழுப்பிய பேரோசையும் கேட்டு; என்னே! இவன் ஒரு மனிசன் என்னா - என்னே! இவனும் ஒரு மனிதனா! என்று வியந்து; மகுடம் ஏற்றினன் - (சரிந்த) தன் மகுடத்தை உயர்த்தித் தள்ளிவிட்டுக் கொண்டான்.

இலக்குவனுடைய வில் வளைவு எமனின் புருவ வளைவு போன்றது என்பது அரியதொரு கற்பனை. இயமனின் புருவ வளைவு பேர் அழிவு செய்தல் ஒருதலை ஆதல் போல, இலக்குவன் வில் வளைவும் பேரழிவு செய்யும் என்பது குறிப்பு. இலக்குவன் வில் நாண் ஒலியால் அதிர்ந்த இராவணன் மணிமுடிகள் தளர்ந்து கீழ் இறங்கியமையால், அவற்றை உயர்த்திச் சரிசெய்து கொண்டான் என்பார். “ஏற்றினன் மகுடம்” என்றார் வியப்பின் மெய்ப்பாடு மகுடம் ஏற்றுதலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The mighty demon too, seeing how the hearts of the warriors
  2. standing near him had broken into pieces, and hearing the long voice
  3. of the hero's brother's bow, which was like the cruel brow of Death,
  4. pushed up his crown, saying, “What! Is this one a mere man?”

What the poem says

Irāvaṇaṉ sees his warriors' nerve break, and hears the deep twang of Ilakkuvaṉ's bow, curved like the frowning brow of Death. Astonished, he exclaims, “Is this a mere man?” and pushes back up his crowns, which the shock of the sound has jolted loose.

When Death frowns, destruction surely follows, and so it will with Ilakkuvaṉ's bent bow. Straightening the crown is the outward gesture of astonishment.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṟṟal cāl arakkaṉtāṉum, ayal niṉṟa vayavar neñcam
vīṟṟu vīṟṟu āki uṟṟa taṉmaiyum, vīraṉ tampi
kūṟṟiṉ vem puruvam aṉṉa cilai neṭuṅ kuralum kēḷā,
ēṟṟiṉaṉ makuṭam ‘eṉṉē ivaṉ oru maṉicaṉ eṉṉā! ‘