கம்பராமாயணம் 7202 · யுத்த 14.144

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கட்டு அமை தேரின் மேலும், களி நெடுங் களிற்றின் மேலும்,
விட்டு எழு புரவி மேலும், வெள் எயிற்று அரக்கர் மேலும்
முட்டிய மழையின் துள்ளி முறை இன்றி மொய்க்குமா போல்
பட்டன பகழி; எங்கும் பரந்தது, குருதிப் பௌவம்

பொருள் · Meaning in Tamil

முட்டிய மழையின் துள்ளி - மோதிச் சிதறிய மழைத்துளிகள்; முறையின்றி மொய்க்குமா போல் - ஒருமுறையாக இல்லாமல் பல இடங்களிலும் பரவுவதுபோல், கட்டுஅமை தேரின் மேலும் - நன்கு அமைக்கப்பட்ட தேரின் மேலும்; களிநெடுங்களிற்றின் மேலும் - மத மயக்கம் கொண்ட பெரிய யானைகள் மேலும்; விட்டு எழு புரவி மேலும் - இருக்குமிடத்தை விட்டுத் தாவிப் பாயும் குதிரைகளின் மேலும்; வெள்எயிற்று அரக்கர் மேலும் - வெள்ளைப் பற்களுடைய அரக்கர்கள் மேலும்; பகழி பட்டன - இலக்குவன் அம்புகள் பாய்ந்தன; குருதிப் பவ்வம் - இரத்தமாகிய கடல், எங்கும் பரந்தது - எல்லா இடங்களிலும் பரவியது.

யானை, குதிரை தேர் காலாட்படை என எங்கு நோக்கினும் இலக்குவன் அம்புகள் பட்ட இடம் ஆயின; அதனால், களம் முழுவதும் இரத்தக் கடல் ஆயிற்று என்பதாம். மழைத்துளிகள் எல்லாவிடத்திலும் தெறிப்பது போல் இலக்குவன் அம்புகள் தெறித்தன என்றார். துள்ளி - துளி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On the well-built chariots, on the tall rutting elephants,
  2. on the horses that leap and spring, on the white-fanged demons,
  3. like the drops of a driving rain that crowd down without order,
  4. the arrows struck; and everywhere the sea of blood spread.

What the poem says

Ilakkuvaṉ's arrows fall on chariots, rutting elephants, galloping horses and demon soldiers alike, like drops of driving rain that land everywhere at once. All four arms of the demon army are hit, and the whole field becomes a sea of blood.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṭṭu amai tēriṉmēlum, kaḷi neṭuṅ kaḷiṟṟiṉmēlum,
viṭṭu eḻu puravimēlum, veḷ eyiṟṟu arakkarmēlum
muṭṭiya maḻaiyiṉ tuḷḷi muṟai iṉṟi moykkumāpōl
paṭṭaṉa pakaḻi; eṅkum parantatu, kurutip pavvam