கம்பராமாயணம் 7203 · யுத்த 14.145
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நகங்களின் பெரிய வேழம் - மலைகளிலும் பெரிய வடிவமுடைய யானைகளின்; நறைமத அருவி - மணம் உடைய மதப்பெருக்கு; காலும் - ஒழுகுகின்ற; முகங்களில் புக்க வாளி - முகங்களில் தைத்து உருவிச் சென்ற (இலக்குவனின்) அம்புகள்; அபரத்தை முற்றி - (அந்த யானைகளின்) பின் புறங்களில் நிறைந்து; மொய்ம்பர் அகங்களைக் கழன்று - வலிமை நிறைந்த வீரர்களின் நெஞ்சங்களில் பாய்ந்து கழன்று; தேரின் அச்சினையுருவி - தேர்ச்சக்கரங்களின் அச்சினைத் துளைத்து; அப்பால் - அதன் பின்னர்; உகங்களின் கடை சென்றாலும் - யுகங்களின் முடிவு கழிந்தாலும்; உலப்பு இல ஓடல்உற்ற - முடிவு இன்றி ஓடத்தொடங்கின.
யானைகளைப் பெரிய மலை என்றமையால், அவற்றின் முகத்திலிருந்து ஒழுகுகின்ற மதநீரை “நறைமத அருவி” என்றார். இலக்குவன் வில்லாற்றலை “வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி, பேழ்வாய் உழுவையைப் பெரும் பிறிது உறீஇப் பன்றி வீழ, அயல தாழற்புற்றத்து உடும்பில் செற்றும் வல்வில் வேட்டம் வலம் படுத்திருந்தோன்” (புறம். 152) “உலை உருவக் கனல் உமிழ் கண் தாடகை தன் உரம் உருவி, மலையுருவி மரம் உருவி மண் உருவிற்று ஒரு வாளி” (கம்ப. 66.2) என்பவற்றோடு ஒப்பிட்டுக் காணலாம். எய்யப்பட்ட விசை புவியீர்ப்பால் பையப் பையத்தாழுமாதலால் அதற்கேற்ப, யானை வீரர் தேர்அச்சு என்று முறையே உயரங்குறைந்த பொருள்களை ஊடுருவிற்று எனக்கூறும் கவிஞரின் அறிவுத்திறனை உணர்க. “ஓய்வுஇல ஓடலுற்ற” உயர்வு நவிற்சி அணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The arrows that entered the faces, streaming with fragrant musth-falls,
- of elephants bigger than mountains, filled their hindquarters, passed through
- the chests of strong warriors, pierced the axles of the chariots, and beyond,
- even when the ages had reached their end, ran on without rest.
What the poem says
Ilakkuvaṉ's arrows go into the faces of mountain-sized elephants, wet with streams of fragrant musth, come out through their hindquarters, pass through the chests of warriors and the axles of chariots, and keep flying, it is said, beyond the end of time.
The commentary notes that each target is lower than the one before, as an arrow sinking under its own weight would strike, and compares a Puṟanāṉūṟu poem in which one arrow kills a whole string of animals.