கம்பராமாயணம் 7204 · யுத்த 14.146
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நூக்கிய களிறும் தேரும் புரவியும் - (அரக்கர் செலுத்திய) யானைகளையும் தேர்களையும் குதிரைகளையும்; நூழில் செய்ய - (இலக்குவனுடைய) அம்புகள் கொன்று குவிக்க; கை ஒத்து ஆக்கிய அரக்கர் ஐயிருகோடி தானை - அணி வகுத்து நின்ற அரக்கருடைய பத்துக் கோடி சேனைகள்; ஊக்கிய படைகள் வீச - செலுத்தற்குரிய ஆயுதங்களை எறிந்து; உலகம் செய்த பாக்கியம் அனைய வீரன் - உலகம் புரிந்த பாக்கியங்கள் எல்லாம் (ஒருங்கு திரண்டு) உருவம் பெற்றது போன்ற வீரனாகிய இராமனுடைய; தம்பியை - இலக்குவனை; சுற்றும் பற்றி - தொடர்ந்து சூழ்ந்து கொண்டு; உடற்றிய - போரிட்டன.
நூழில் செய்தல் - கொன்று குவித்தல். “ஒள்வாள் வீசிய நூழிலும்” (தொல். பொருள்: புறத். 7) கையொத்தல் - அணிவகுத்தல். இன்றும் போர்ப் படைகள் கை ஒத்து அணிநடை செல்லுதல் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the elephants, chariots and horses they drove on were slaughtered in heaps,
- the demon army, ten crores strong, drawn up rank by rank,
- hurled the weapons they had readied and fought, closing all round
- the brother of the hero who is like the good fortune the world has earned.
What the poem says
As Ilakkuvaṉ's arrows pile up their elephants, chariots and horses in heaps, ten crores of demon soldiers in ordered ranks surround him and attack with every weapon they have.
Irāmaṉ is called “the good fortune the world has earned”, all the world's merit taking bodily form in one hero.