கம்பராமாயணம் 72 · பால 2.52

Section பால காண்டம் / 2. நாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இடம் கொள் சாயல் கண்டு இளைஞர் சிந்தை போல்,
தடம் கொள் சோலை வாய் மலர் பெய் தாழ்குழல்,
வடம் கொள் பூண் முலை மடந்தைமாரொடும்,
தொடர்ந்து போவன; தோகை மஞ்ஞைகள்.

பொருள் · Meaning in Tamil

தோகை மஞ்ஞை - தோகையை உடைய ஆண் மயில்கள்; தடம் கொள் சோலைவாய் - விசாலமான சோலையினிடத்தே; இடம் கொள் சாயல் கண்டு - (தமது பெண் மயில்களின்) பெருமைக்குரிய சாயலைப் பார்த்து; இளைஞர் சிந்தை போல் - இளம் வயதினரான ஆண்களின் மனத்தைப் போல; மலர் பெய்தாழ் குழல் - மலரணிந்த நீண்ட கூந்தலையும்; வடம் கொள் பூண் முலை - முத்து மாலைகளை அணிந்த தனங்களையும் உடைய; மடந்தை மாரொடு - அந்தப் பெண்களுடனே; தொடர்ந்து போவன - பின்தொடர்ந்து செல்வனவாம்.

ஆண் மயில்கள் சோலையில் உலாவும் பெண்களை சாயலால் மயில் போன்றிருக்கும் அவர்களைப் பெண்மயில்கள் என்று கருதிப் பின்தொடரும் என்றது மயக்கவணி. இளைஞர்: காளைப் பருவத்தினரான ஆண்கள். இடம்: பெருமை. வடம்: முத்து வடம். தாழ்குழல்: நீண்ட கூந்தல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like the hearts of young men that follow when they see such fine grace,
  2. in the broad groves, after the women whose long hair is set with flowers
  3. and whose breasts are adorned with strands of pearls,
  4. the plumed peacocks follow along.

What the poem says

Women stroll in the wide groves, their long hair decked with flowers and pearl strings on their breasts. They move with such peacock-like grace that the male peacocks mistake them for peahens and follow them about, just as the hearts of young men follow them. This is the figure of delusion again, and it makes a gentle joke: the peacocks and the young men are equally smitten.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṭam koḷ cāyal kaṇṭu iḷaiñar cintaipōl,
taṭaṅ koḷ cōlaivāy malar pey tāḻ kuḻal,
vaṭam koḷ pūṇ mulai maṭantaimāroṭum,
toṭarntu pōvaṉa; tōkai maññaiyē.