கம்பராமாயணம் 73 · பால 2.53

Section பால காண்டம் / 2. நாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, நேர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்.

பொருள் · Meaning in Tamil

ஓர் வறுமை இன்மையால் - (அந்த நாட்டில்) வறுமை சிறிதும் இல்லாததால்; வண்மை இல்லை - கொடைக்கு அங்கே இடமில்லை; ஓர் செறுநர் இன்மையால் - நேருக்கு நேர் போர்புரிபவர் இல்லாததால்; திண்மை இல்லை - உடல் வலிமையை எடுத்துக்காட்ட வாய்ப்பில்லை; பொய் உரை இல்லாமையால் - பொய்ம் மொழி இல்லாமையால்; உண்மை இல்லை - மெய்ம்மை தனித்து விளங்கவில்லை; பல்கேள்வி மேவலால் - பலவகைக் கேள்விச் செல்வம் மிகுந்து விளங்குவதால்; வெண்மை இல்லை - வெள்ளறிவாகிய அறியாமை இல்லை.

கோசல நாட்டில் வறுமை சிறிதும் இல்லாதலால் வண்மையின் சிறப்புத் தெரிவதில்லை; பகைகொண்டு போர்புரிபவர் இல்லாதலால் உடல் வலிமையை உணர வழியில்லை; பொய் பேசுவோர் இல்லாமையால் உண்மையின் பெருமை தெரிய வழியில்லை; கேள்வி ஞானம் மிகுந்திருப்பதால் அங்கு அறியாமை சிறிதுமில்லை என்றார். 'யாதும் கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை' (165) என்று மேலே கூறுவர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. There is no generosity, since there is no want at all;
  2. there is no show of strength, since there is not a single foe;
  3. there is no truthfulness, since there is no false speech;
  4. there is no ignorance, since much learning has been taken in by ear.

What the poem says

One of the best-known verses of the epic. It praises Kōcalam by saying what it lacks. No one there is in need, so there is no occasion for generosity. There are no enemies, so strength is never tested. No one lies, so truthfulness never stands out as a virtue. And because everyone has listened to much learned teaching, there is no ignorance at all.

Virtues show up only against their opposites. In a perfect society they become invisible, and the poet makes this paradox his highest praise. A later verse says the same: no one gives because no one takes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṇmai illai, ōr vaṟumai iṉmaiyāl;
tiṇmai illai, ōr ceṟunar iṉmaiyāl;
uṇmai illai, poy urai ilāmaiyāl;
veṇmai illai, pal kēḷvi mēvalāl.