கம்பராமாயணம் 74 · பால 2.54
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எள்ளும் ஏனலும் இறுங்கும் சாமையும் கொள்ளும் - எள்ளும், தினையும், சோளமும், சாமையும், கொள்ளும்; கொள்ளையில் கொணரும் பண்டியும் - மிகுதியாகக் கொண்டு வரும் வண்டிகளும்; அள்ளல் ஓங்கு அளத்து அமுதின் பண்டியும் - சேறு நிறைந்த உப்பளத்திலிருந்து உப்பைக் கொண்டு வரும் வண்டிகளும், தள்ளும் நீர்மையில் தலை மயங்கும் - பாரமிகுதியால் இயல்பாக ஓட்டிச் செல்ல இயலாது ஆட்கள் தள்ளும் தன்மையால் ஒன்றுடன் ஒன்று கலப்பதாகும்.
தலை மயங்கும், தம்மில் ஒன்றுபட்டுக் கலக்கும். இதற்கு இடம் மாறுபடும் என்று பொருள் கூறுவதுமுண்டு. ஓரிடத்தில் விளைந்த எள் முதலியவை அவை விளையாத வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதால் 'இடம் மாறும்' என்பதும் பொருந்தும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Sesame and millet and sorghum and little millet
- and horse gram: the carts that bring them in great loads,
- and the carts of salt from the deep-mired salt pans,
- pushed along by hand, crowd in among one another.
What the poem says
Trade moves along Kōcalam's roads. Carts loaded with sesame, millet, sorghum and horse gram from the dry uplands meet carts of salt from the muddy salt pans on the coast. They are so heavily laden that the bullocks cannot pull them alone and men have to push. On the crowded roads the carts jostle and mingle. The verb can also mean "exchange places", since produce is carried from where it grows to places where it does not.