கம்பராமாயணம் 7206 · யுத்த 14.148
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பகழி மாரி பொழிந்தனன் - (இலக்குவன்) அம்பு மழை பொழிந்தான்; அரக்கர் எய்த எறிந்தன அறுத்தனன் - இராக்கதர் விடுத்த கணைகளையெல்லாம் (ஒன்றுவிடாது) அறுத்தெறிந்தான்; அறுத்து அறாத பொறுத்தனன் - அறுத்தும் அறாத ஆயுதங்களைத் தன் மேல் ஏற்றுக் கொண்டான்; நமனும் உயிரின் போகம் வெறுத்தனன் - எமனும் உயிர்களை உண்ணும் மகிழ்ச்சி துறந்து வெறுப்பதானான்; மாமலைகள் மான - பெரிய மலைகள் போல; பிணங்கள் எங்கும் மறிந்த - பிணங்கள் போர்க்களம் எங்கும் வழி மறித்துக் கிடந்தன; உதிரத்தின் வெள்ளம் வேலை மீள மறித்தன - இரத்த வெள்ளம் கடலிற் போய்ச் சேராவண்ணம் பிணங்கள் தடுத்து விட்டன.
உயிர் உண்ணும் கூற்றுக்கும், உண்ண இயலாமல் திகட்டிப் போய்விட்டது என்பார். “உயிரின் போகம் வெறுத்தனன் நமனும்” என்று அழகுறக் குறித்தார். இங்குப் பெரும் பள்ளமாகிய கடல் அருகிலிருந்தும் பிணமலைகள் தடுத்ததால் கடலில் சென்று சேர இயலவில்லை என்னும் வியப்புச் சுவை தோன்ற வைத்தார்
ஆங்கிலம் · English translationAI
Translation
- He cut down what the demons shot and hurled; what he cut and could not sever
- he bore; he poured down a rain of arrows; even Death
- grew sick of his feast of lives; the corpses, like great mountains,
- lay piled everywhere and turned back the floods of blood from the sea.
What the poem says
Ilakkuvaṉ cuts down whatever the demons throw or shoot at him, takes on his own body whatever gets through, and answers with a rain of arrows. So many die that even Death, who feeds on lives, is sick of the feast.
The corpses pile up like mountains, so that the rivers of blood cannot reach the nearby sea and are dammed back.